முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயிலில் இருந்த படி வியாபாரிக்கு கைதி மிரட்டல்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, செப்.23 - ஜெயிலில் இருந்த படி செல்போன் மூலம் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாக கைதி மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இருந்து கைதிகள் செல்போனில் பேசி கூலிப்படையை ஏவி கொலைகள் செய்வதாக புகார்கள் கூறப்பட்டன. இதையொட்டி போலீசார் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தி செல்போன்களை கைப்பற்றினர். தொடர்ந்து தீவிரமாக கண்காணித்தும் வந்தனர். ஆனாலும் புதுவை சிறைச்சாலையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவது குறையவில்லை என்று தெரியவந்துள்ளது. 

ஜெயிலில் இருந்து செல்போன் மூலம் மிரட்டி கைதி ஒருவர் பணம் கேட்டதாக முதலியார்பேட்டை போலீசில் வியாபாரி ஒருவர் புகார் செய்துள்ளார். 

புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கந்தா. இவர் சமீபத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன்(35)என்பவர் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இவர் மீது முதலியார்பேட்டை போலீசில் வாணரப்பேட்டை ரோசய்யா டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் புதுவை பாரதி வீதியில் ஓட்டல் வைத்துள்ளேன். எனக்கு காலாப்பட்டு ஜெயிலில் இருந்து அய்யப்பன் செல்போனில் பேசினார். அப்போது அவர், நான் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வருவதற்கு செலவு செய்ய பணம் தேவைப்படுகிறது. எனது ஆளை அனுப்புகிறேன். அவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்து விடு. இல்லாவிட்டால் கந்தாவுக்கு ஏற்பட்ட கதி தான் உனக்கும் ஏற்படும் என்று மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயிலில் இருந்து செல்போன் மூலம் வியாபாரியை கைதி மிரட்டிய சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago