Image Unavailable

 

புதுடெல்லி,செப்.23 - திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் 6 வது அறையை திறப்பதை 3 மாதத்திற்கு சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது. பத்மநாபசாமி கோயிலில் 6 ரகசிய பாதாள அறைகளில் மன்னர் காலத்தில் தங்கம், வைரம், வைடூரிய நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இவற்றை திறந்து நகைகளை மதிப்பீடு செய்ய நிபுணர் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. அவர்கள் மொத்தமுள்ள 6 அறைகளில் 5 அறைகளை திறந்து நகைகளை மதிப்பிட்டனர். மேலோட்டமாக அவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்பட்டது. 

அடுத்த 6 வது அறையை திறக்க முயன்ற போது அது கடினமான இரும்புக் கதவுகளால் மூடப்பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை. இதுவரை 5 அறைகளிலும் சிக்கிய அளவு தங்க ஆபரணங்களைப் போல் இந்த 6 வது அறையில் மிகப் பெரிய அளவில் தங்கக் குவியல் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதற்கிடையில் 6 வது அறையை திறக்கக் கூடாது என்றும் கோவில் சொத்துக்களை அரசு ஏற்க தடை விதிக்கக் கோரியும் திருவாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த மார்த்தாண்ட வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை எதிர்த்து கேரள அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் 6 வது அறையை திறக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் 6 வது அறையை திறப்பதை மேலும் 3 மாதத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது. 5 அறைகளிலும் கண்டெடுக்கப்பட்ட தங்க நகைகள், ஆபரணங்களை சரிபார்த்து மதிப்பிட்டு அது பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 3 மாதத்தில் இந்த பணியை முடிக்க வேண்டும். அதன் பிறகுதான் 6 வது அறையை திறப்பது குறித்து உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் கோவில் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. மாநில அரசே முழு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.


Egg Paniyaram with Moringa leaves | Healthy snack ideas


சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


மூல நோயை குணப்படுத்த எளிய மருத்துவம் | Home Remedies for piles |P. புஷ்பமாரி சித்த மருத்துவர்


இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? | How To Get Free Aid| Right to Free Legal Aid


Mr & Mrs Short Film | Tamil Comedy Short Film |Short Film in Tamil | Short Film Tamil Comedy



Rhyme time with Shanaya - Children's Song/Rhymes for Babies, Toddlers & Kids



கிலோமீட்டருக்கு 10 பைசாவில் 400 கிலோ எடையை இழுக்கும் எலக்ட்ரிக் பைக்|Komaki CAT 2.O Review



இன்சுலினை சுரக்கவைத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் உட்கட்டாசனம | Utkatasana Benefits in Tamil | EP-7



அதிமுக சாதி கட்சியாக மாறிவிட்டதா? KC.பழனிச்சாமி குற்றச்சாட்டு | K C Palanisamy Exclusive Interview


இதை ஷேர் செய்திடுங்கள்: