முக்கிய செய்திகள்

இந்தியாவை அடுத்து துருக்கியிலும் நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

அங்காரா,செப்.23  - இந்தியாவை அடுத்து துருக்கியிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 5.6 ஆக பதிவாகி இருந்தது. ஆனால் சேதம் எதுவும் இல்லை என்று முதலில் வந்த தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் கடந்த புதன்கிழமை அன்று சிக்கிம், மேற்குவங்காளம்,டெல்லி, உள்பட வட மாநிலங்களில் பூகம்பம் ஏற்பட்டது இதில் 100 பேர் பலியாகிவிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் ஐரோப்பாவின் நோய் நாடு என்று அழைக்கப்படும் துருக்கியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றுக்காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியின் கிழக்கு மாகாணமான இர்ஜின்சன் மாகாணத்தில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இர்ஜின்சன் மாகாணத்தின் அண்டை மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என்று இஸ்தான்புல்லில் உள்ள பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. துருக்கி அடிக்கடி பூகம்பத்தால் பாதிக்கப்படும் நாடாகும். இங்கு நிலநடுக்கம் ஓரளவு அதிகமாக ஏற்பட்டாலும் சேதம் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் கட்டிடங்கள் வலுவாக கட்டப்படாததுதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்: