முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், செப்.23 - பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற அக்டோபர் மாதம் 6 ம் தேதிக்கு கர்நாடக ஐகோர்ட்டு  ஒத்திவைத்துள்ளது.பிரபல கன்னட நடிகர் தர்ஷன் ஏராளமான கன்னட படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர். 

சமீபத்தில் இவருக்கும் இவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜயலட்சுமியை  தர்ஷன் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால்  காயம் அடைந்த விஜயலட்சுமி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தன்னை தனது கணவர் தர்ஷன் தாக்கியதாகவும் அதனால் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் மேலும் துப்பாக்கியை காட்டி தன்னை கொலை செய்து விடுவதாக தனது கணவர் மிரட்டியதாகவும் விஜயலட்சுமி கடந்த 8 ம் தேதி போலீசில் புகார் செய்தார். 

இந்த புகாரை பதிவு செய்த போலீசார் நடிகர் தர்ஷனை கைது செய்தனர். 

பிறகு முதன்மை கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தர்ஷனை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

அதன் பிறகு நேற்று மீண்டும் இந்த வழக்கில் தர்ஷனின் நீதிமன்ற காவலை வருகிற அக்டோபர் மாதம் 4  ம் தேதி வரை நீட்டித்தும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் தர்ஷன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார். 

நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜரான தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி தனது கணவரை காப்பாற்றும் முயற்சியாக தான் பாத்ரூமில் கீழே விழுந்ததால்தான் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டது என்றும் தனது கணவர் தாக்கியதால் காயம் ஏற்படவில்லை என்றும், எனவே தான் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

ஆனால் விஜயலட்சுமியின் இந்த கோரிக்கையை மாஜிஸ்திரேட்டு ஏற்கவில்லை.

இ.பி.கோ. 307 என்ற கொலை முயற்சி பிரிவில் இந்த வழக்கு  தொடரப்பட்டுள்ளதால் இந்த வழக்கை இப்படியே ரத்து செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்று மாஜிஸ்திரேட்டு கூறிவிட்டார்.

இந்த நிலையில் நடிகர் தர்ஷன் ஏற்கனவே கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த  ஜாமீன் மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்டது. 

ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பின்டோ முன்னிலையில் இந்த ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் தனது ஆட்சேபணையை 14 நாட்களுக்குள் தெரிவிக்க நீதிபதி பின்டோ அவகாசம் கொடுத்தார்.

இதை அடுத்து இந்த மனு மீதான விசாரணையை வருகிற அக்டோபர் 6 ம் தேதிக்கு  நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago