முக்கிய செய்திகள்

நியூயார்க் நகரில் பிரதமர் மன்மோகன் சிங்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

பிராங்புரூட்,செப்.23 - ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பிராங்புரூட் நகரில் இருந்து நியூயார்க் புறப்பட்டு சென்றார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் நாளை அவர் உரையாற்றுகிறார். மன்மோகன் சிங்குடன் உயர்மட்டக்குழுவும் நியூயார்க் சென்றுள்ளது. 

மன்மோகன் சிங் நியூயார்க் புறப்பட்டு செல்லும் முன் பிராங்புரூட் நகரில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஐக்கியநாடுகள் சபை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் நான் உரையாற்றும்போதும் தலைவர்களை சந்தித்து பேசும்போது ஐ.நா.சபையில் சீர்திருத்தம் செய்ய வற்புறுத்துவேன். குறப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வற்புறுத்துவேன் என்று கூறியுள்ளார். பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தரமற்ற உறுப்பினரான பின்னர் சர்வதேச அளவில் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பாடுபாட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் ஈரான் அதிபர் மஹ்மத் அகமதிநிஜாத், சூடான் அதிபர் சல்வா கீர், இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சே, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடோ நோடா, நேபால் பிரதமர் பாபுராம் பத்தரை ஆகியோர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார். கடந்த 19 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா மீண்டும் பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினராகியுள்ளது. நிரந்தர உறுப்பினராக பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங்குடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் வெளியுறவு செயலாளர்   ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். நியூயார்க் நகரில் இவர்களுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி நிரூபமா ராவ் கலந்துகொள்வார். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஐக்கிய நாடுகள் பொதுசபையில் பிரதமர் மன்மோகன் சிங் நாளை உரையாற்றுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: