முக்கிய செய்திகள்

20 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,செப்.24 - பாகிஸ்தான் கடற்பரப்பில் ஊடுருவியதாக 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது 4 விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய மீனவர்கள் இருபது பேரும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு கராச்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கராச்சி போலீசார் அயல்நாட்டவருக்கான சட்டம் மற்றும் மீன்பிடி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கடல் எல்லையை தாண்டி மீன்பிடிப்பது தொடர்பாக நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஆண்டுதோறும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டாலும் கைது செய்யப்படுகின்றனர். சிறைக்காலம் முடிந்த பின்னரும் சிறையில் இருந்த வெளிவர முடியாமல் இருக்கும் மீனவர்களை விடுவிக்க இரு நாடுகளும் அண்மை காலமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: