முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல்: முதல் நாளில் 1056 பேர் மனுதாக்கல்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். 24​- வேட்பு மனு தாக்கல் தேதியான 22 ம் தேதியன்று வேட்பு மனுத்தாக்கல் மந்தாமாக  தொடங்கியது. இருப்பினும் சுயேட்சைகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தது . பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்வு இன்னும் சரியாக முடிவாகாத நிலையில் உள்ளது குறிப்பிடித்தக்கது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நேற்றுமுன் தினம் தொடங்கியது. மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய 1 லட்சத்து 96 ஆயிரம் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காததால் முதல் நாளான நேற்றுமுன்தினம் வேட்புமனுதாக்கல் மந்தமாக இருந்தது. சுயேட்சைசகள் அதிக அளவில் மனு செய்தனர். நேற்று முன்தினம் மாலை வரை 1056 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். உள்ளாட்சி தேர்தலில் கிராமப்பகுதிகளில் 2 லட்சத்து 39 ஆயிரம் ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. நகர்புறங்களில் 80 ஆயிரத்து 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்