முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளத்தில் இயல்புநிலை திரும்பியது

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை செப்-24 - கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக 12நாட்கள் நடைபெற்ற போராட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கூடங்குளத்தில் நேற்று இயல்பு நிலை திரும்பியது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 12நாட்களாக அந்த பகுதி கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் தொடர்போராட்டம் நடத்தினர். மேலும் பலர் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் அந்த பகுதிகளில் கடைகள் யாவும் அடைக்கப்ட்டன. இதனால் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பதற்றமான சூழல்நிலவி வந்தது. இந்நிலையில் போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். மேலும் கூடங்குளம் அணுமின்நிலையம் தற்காலிகமாக மூடவேண்டும் என்று அமைச்சரவையிலும் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 12நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் நிறைவு பெற்றதை 

தொடர்ந்து நேற்று மீனவர்கள் தங்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பினர். நேற்று சுமார் 10ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அந்த பகுதிகளில் 

உள்ள கடைகள் மற்றும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தற்போது கூடங்குளம் பகுதியில் இயல்புநிலை திரும்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்