முக்கிய செய்திகள்

பூட்டான் மன்னர் திருமணம் அக். 13-ம் தேதி நடக்கிறது

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

சனவர்,செப்.24 - பூட்டான் மன்னர் ஜிக்மி ஹிசர் நம்ஜியல் வாங்சுக் திருமணம் வருகிற அக்டோபர் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. மணமகள் பெயர் ஜெட்சுன் பெமா. வாங்சுக் திருமண தேதியை மணமகள் பெமாவின் தாயார் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இமாசலப்பிரதேச மாநிலத்தில் உள்ள சனவரில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பெமா படித்தவர். இவருடைய தங்கை செர்சன் டோமாவும் இதே லாரன்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த திருமணத்தில் கலந்துகொள்ள செர்சன் டோமாவை அனுப்பி வைக்கும்படி அவரது தாயார் கேட்டுக்கொண்டுள்ளதாக லாரன்ஸ் பள்ளியில் வேலைபார்க்கும் ஒரு ஆசிரியர் தெரிவித்தார். கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து பெமரா இந்த பள்ளியில் படித்தார். அவரது தங்கையும் இதே பள்ளியில் படித்து வருகிறார் என்றும் அந்த ஆசிரியர் தெரிவித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவனான 31 வயதாகும் பூட்டான் மன்னர் வாங்சுங் கடந்த மே மாதம் கூடிய பூட்டான் பாராளுமன்ற கூட்டத்தின் முதல் நாள் அன்று பெமாவை வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: