முக்கிய செய்திகள்

நாசா விண்கலம் கனடாவில் விழலாம்: விஞ்ஞானிகள்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

கேப் கனவெரல்,செப்.25 - அமெரிக்க விஞ்ஞானிகள் அனுப்பிய விண்வெளி ஆராய்ச்சி விண்கலம் கனடாவின் மேற்கு பகுதியில் வந்து விழலாம் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1991-ம் ஆண்டு சுமார் 6 டன் எடையுள்ள யு.ஏ.ஆர்.எஸ். என்ற விண்கலத்தை அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணிற்கு அனுப்பினர். இந்த விண்கலமானது சூரிய வட்டப்பாதையை சுற்றி அங்கிருந்து புகைப்படங்களை அனுப்பிக்கொண்டியிருந்தது. இந்த விண்கலம் திடீரென்று கடந்த 2005-ம் ஆண்டு பழுதடைந்து நொறுங்கியது. நொறுங்கிய பாகங்கள் பூமியை நோக்கி வந்துகொண்டியிருந்தன. நேற்றுமுன்தினம் பூமியின் சுற்றுப்பாதைக்குள் அந்த நொறுங்கிய பாகங்கள் நுழைந்து தரையை நோக்கி வந்துகொண்டியிருக்கிறது. இந்த விண்கலத்தின் உடைந்த பாகங்கள் சுமார் 700 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சிதறி விழலாம் என்றும் இதனால் மக்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பூமியை நோக்கி வந்துகொண்டியிருக்கும் உடைந்த பாகங்கள் கனடாவின் மேற்கு பகுதியில் உள்ள கல்கரி நகருக்கு தெற்கே விழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பூமி மேல் மோதி விழுந்து சிதறும்போது பொருட் சேதமோ அல்லது உயிர்சேதமோ ஏற்பட வாய்ப்பு குறைவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயத்தில் இந்த விண்கல துகள்கள் எந்த நேரத்தில் விழலாம் என்பதை துள்ளிதமாக கணித்து கூற முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் நாசா அனுப்பிய ஸ்கைலாப் என்ற விண்கல ஆய்வு மையத்தின் எடை 75 டன்னாகும். இதுவும் கடந்த 1979-ம் ஆண்டு பூமியில் விழுந்து நொறுங்கியது. ரஷ்யா அனுப்பிய வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் எடை 135 டன் எடையாகும் இதுவும் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: