முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிட்சர்லாந்து - ஆஸ்திரியாவுக்கு ஜனாதிபதி பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,செப்.25- சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்த மாதம் அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் செல்லவுள்ளார். சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களின் அழைப்பின் பேரிலேயே இந்த சுற்றுப் பயணம் அமைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 30 ம்தேதி முதல் அக்டோபர் 4 ம் தேதி வரை சுவிட்சர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி பிரதீபா, அந்நாட்டு அதிபர் மிக்கெலின் கால்மி ரேயை சந்திக்கிறார். அத்துடன் அந்நாட்டு அமைச்சரவை குழுவையும் சந்திக்கவுள்ளார். 

இந்திய கல்விகளில் தாகூர் இருக்கையை ஏற்படுத்துவதற்காக அந்நாட்டின் லுசான் பல்கலைக் கழகம், இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொள்ளவிருக்கிறது. அக்டோபர் 4 ம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பல்கலை வளாகத்தில் தாகூரின் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் அன்றைய தினமே ஆஸ்திரியாவுக்கு புறப்படும் அவர், அக்டோபர் 7 ம் தேதி வரை அந்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 

ஆஸ்திரிய அதிபர் ஹெயின்ஸ் பிஷரை சந்திக்கும் ஜனாதிபதி, அந்நாட்டு பிரதமர் ஷெர்னர் பாய்மன் மற்றும் அந்நாட்டு மக்களவை தலைவர் பார்ப்பராவையும் சந்திக்கிறார். ஜனாதிபதியுடன் தொழிலதிபர்கள் அடங்கிய குழுவும் செல்கிறது. இரு நாடுகளின் தொழிலதிபர்களும் கலந்து கொள்ளும் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகிறார். மேலும் இந்நாடுகளில் வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்