முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மேயர் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன்செல்லப்பா வேட்பு மனு தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.- 27- மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வி.வி.ராஜன்செல்லப்பா நேற்று தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.   உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளராக வி.வி.ராஜன் செல்லப்பாவை அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேயர் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா நேற்று அதிமுகவினருடன் சென்று தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான எஸ்.நடராஜனிடம் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி மகேஸ்வரி ஒரு வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பாளர்  ராஜன்செல்லப்பா வேட்பு மனுவுடன் ரூபாய் 2.25 கோடி மதிப்பிலான சொத்து பட்டியலையும் தாக்கல் செய்தார்.    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்எல்ஏ, கே.தமிழரசன் எம்எல்ஏ, முன்னாள் எம்பிக்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், எஸ்.முத்துமணி, முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம், மாமன்ற குழு தலைவர் பெ.சாலைமுத்து,  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, மாணவரணி செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி, சிறுபான்மை பிரிவு செயலாளர் என்.ஜமால்மைதீன், மத்திய தொகுதி செயலாளர் எஸ்.குமார், மேற்கு தொகுதி செயலாளர் எஸ்.முருகேசன், வடக்கு தொகுதி இணை செயலாளர் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் முனியசாமி, சண்முகவள்ளி, வி.எஸ்.முத்துராமலிங்கம், மாவட்ட பேரவை துணைதலைவர் புதூர் அபுதாகீர், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வி.கே.சாமி, பகுதி கழகசெயலாளர்கள் கே.ஜெயவேல், பூமிபாலகன், ஜெயபால், வி.கே.எஸ்.மாரிச்சாமி, கவுன்சிலர் மார்க்கெட் செல்லத்துரை, தொழிற்சங்க மாவட்ட தலைவர் அமாவாசை, ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஏ.கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பின்னர் அதிமுக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகளுடன் சென்று எம்ஜிஆர் சிலை, பெரியார், டாக்டர் அம்பேத்கார், முத்துராமலிங்கதேவர், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது சிலைகளுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்