முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காப்புரிமை பெற முயற்சிக்கும் பேராசிரியருக்கு கற்பித்தல் பணியிலிருந்து விலக்கு சென்னை பல்கலைக்கழகம் முடிவு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். - 27 - ஆராய்ச்சிக்குப் பின்  அது தொடர்பாககாப்புரிமை (பேடன்ட்)பெறமுயற்சிக்கும் பேராசிரியர்களுக்குக் கற்பித்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கும் புதிய திட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து பல்கலை. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நாட்டுக்குப் பயன்தரக் கூடிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பேராசியர்களுக்கு  கற்பித்தல் பணியிலிருந்து  விலக்கு அளிக்கும் இத் திட்டத்தை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியதாவது: சென்னைப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. 1999 முதல் 2008 வரை அதிகளவு சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை  பிரபல ஆய்வு நிறுவனமான ஸ்கோபஸ் அண்மையில் வெளியிட்டது.  25 இந்திய  பல்கலைக்கழகங்களுக்கான இப்பட்டியலில் சென்னைப் பல்கலைக்கழகம் 6-வது இடத்தைப் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் 3,060 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.  எனினும், பல்கலைக்கழகம் வெளியிடும் ஆராய்ச்சிக்கட்டுரைகளை பயன்படுத்தி வெளிநாடுகள் லாபமடைந்து வருகின்றன. இதனால் ஆராய்ச்சியோடு நின்றுவிடாமல், அதை நாட்டுக்குப் பயன்படும் வகையில் பொருள் ரீதியான கண்டுபிடிப்பாக மாற்ற வேண்டும்   என முடிவு செய்துள்ளோம்.  இதற்கு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டவுடன்  காப்புரிமை பெற வேண்டும்.
இவ்வாறு பொருள் ரீதியிலான ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர்கள் மற்ற பணிகளில் கவனம் செலுத்த முடியாது என்பதால், அவர்களுக்கு கற்பித்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க  பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது என்றார் .
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்