முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்தலில் பதவிகளை ஏலம்விட்டால் கடும் வினைகளை சந்திக்க நேரிடும்- தேர்தல் ஆணையம்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.- 27 - ஜனநாயக தேர்தலில் பதவிகளை ஏலம் விட்டால் கடும் விளைகளை சந்திக்க நேரிடும்  என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடப்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:​ தமிழ்நாட்டில், எதிர்வரும் அக்டோபர் 17-ந்தேதி மற்றும் 19-ந்தேதி ஆகிய இரு நாட்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற மாநிலத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேர்தல் பணிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒரு சில மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் பதவியிடங்கள் ஏல முறையில் கைப்பற்ற முயற்சிகள் செய்வதாகவும், இந்த செயல்களில் ஒரு சில ஊர் பிரமுகர்கள் கூட்டாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் பெறப்படுகின்றன. இந்த செயல்கள் கடுமையாக கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் வேண்டியதாகும். மேலும், இது கிரிமினல் குற்றமாகவும் கருதப்பட்டு கடும் தண்டனை வழங்கவும் வழிவகுக்கும். எனவே, இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட கலெக்டர்கள் கவனமாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்று வரப்பெறும் தகவல்கள் மீது உடனடியாக விசாரித்து, மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என, உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்