முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டலூர் ஊயிரியில் பூங்காவில் புலிகுட்டிகளுக்கு முதல்வர் பெயர் சூட்டினார்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.-28- சென்னை  வண்டலூர்  உயிரியல் பூங்காவில் பிறந்த  வெள்ளைப் புலிக்குட்டிகளுக்கும் , சிங்க குட்டிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பெயர் சூட்டினார். -சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்  கடந்த 3.8.2011 அன்று அனு என்ற வெள்ளைப் புலி, ஒரு ஆண் புலி குட்டியையும், ஒரு பெண் புலி குட்டியையும் ஈன்றெடுத்தது.  பின்னர் கடந்த  30.6.2011 அன்று கவிதா என்கிற சிங்கமும்  ஒரு ஆண் சிங்கக் குட்டியை ஈன்றெடுத்தது.  இந்த அரிய வகை வெள்ளையின புலி குட்டிகளைளை உயிரியல் பூங்காவில் பாதுகாப்பாக பாராமரிக்கப்பட்டுவந்தது. தற்போது  புதிய  குட்டிகளுக்கு பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டது. உடனே முதல்வர் மகிழ்ச்சியோடு இந்த புலிக்குட்டிகளுக்கு ராமா என்று ஆண் வெள்ளைப் புலி குட்டிக்கும், பெண் வெள்ளைப் புலி குட்டிக்கு சந்திரா என்றும் பெயர் சூட்டினார்கள். மேலும் சிங்ககுட்டிக்கு  வீரா என்றும் பெயர் சூட்டினார்.  இதுகுறித்து உயிரியல் பூங்கா ஊழியர்கள்  கூறுகையில் , முதல்வர்   பெயர் சூட்டியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துனர். வருகின்ற சுற்றுலா பயணிகளிடம்  புலிக்குட்டிகளை காண்பித்து  பெயர்களை குறிப்பிட்டு  அழைத்து பயணிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்துகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்