முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டலில் புகுந்து லாரி 3 மாணவர்கள் பலி -4 பேர் படுகாயம்- பி.வி.ரமணா ஆறுதல்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவள்ளூர், செப். - 28 - ஓட்டலில் புகுந்து மணல்  லாரி மோதியதில்  3 மாணவர்கள் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் பி.வி.ரமணா  காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார். டாக்டர்களிடம் தீவிர சிகிச்சையளிக்கும்படி கேட்டுக்கொண்டார். திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி அருகிலேயே செங்குன்றம் ​திருவள்ளூர் சாலையோரத்தில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் பள்ளி மாணவர்கள் சாப்பிடுவது வழக்கம். நேற்று காலை 20​க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருவள்ளூர் நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஓட்டலுக்குள் புகுந்தது. இதனை பார்த்ததும் மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். லாரி புகுந்து  நசுங்கியதில் 8 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவர்களை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கொமக்கம்பேடை சேர்ந்த முனுசாமி, காதர்வேடு மோகன்தாஸ், செம்பேடு ராஜ்குமார் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் அனைவரும் பிளஸ்​2 படித்து வந்தனர். படுகாயம் அடைந்த நாகராஜ், புன்னம்பாக்கத்தை சேர்ந்த தம்பித்துரை, கொமக் கம்பேடை சேர்ந்த செல்வகுமார், சபாபதி, ராஜ்பரத் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 

ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான பள்ளி மாணவர்கள் திரண்டனர். அவர்கள் கதறி அழுதபடி நின்றனர். தம்பித்துரை, செல்வகுமார், சபாபதி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். மற்றவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்களும், பொது மக்களும் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்ய வேண்டும், பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் பள்ளி நேரங்களில் இவ்வழியே லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும், வெள்ளியூரில் உள்ள மணல் குவாரியை மூட உத்ததவிட வேண்டும் என்று கூறி செங்குன்றம் ​திருவள்ளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர்.அப்போது சிலர் விபத்து ஏற்படுத்திய லாரியை தீ வைத்து கொளுத்தினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் ரமணா, மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி, போலீஸ் சூப்பிரண்டு வனிதா ஆகியோர் சமாதான பேச்சில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 3 மாணவர்கள் பலியானதையடுத்து  நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களையும், இறந்த மாணவர்களையும் காவல்துறை ஐ.ஜி. சைலேந்திரபாபு, டி.ஐ.ஜி, அமைச்சர் பி.வி.ரமணா, திருவள்ளூர் ்்அ.தி.மு.க.  செயலாளர் புட்லூர் சந்திரசேகர், nullந்தமல்லி எம்.எல்.ஏ. மணிமாறன், கண்டோன்மன்ட் பாஸ்கர் ஆகியோர் மருததுவனைக்கு சென்று மாணவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்