முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி கோர்ட்டில் துணைமேயர் மன்னன் சரண்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.- 28 - அ.தி.மு.க. அரசு வக்கீல் வீட்டில் சோடாபாட்டில் வீசிய வழக்கில் மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றார். மதுரை பகலவன் நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க. வழக்கறிஞரான இவர் மாவட்ட கோர்ட்டில் அரசு வக்கீலாகவும் உள்ளார். கடந்த மாதம் இவரது வீட்டில் மர்ம கும்பல் சோடா பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியது. இது குறித்து தமிழ்ச்செல்வன் கரிமேடு போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் இதுதொடர்பாக மதுரை தி.மு.க.இளைஞரணி செயலாளர் ஜெயராமன், மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜெயராமன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். துணை மேயர் மன்னன் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.  மதுரை ஐகோர்ட்டில் மன்னன் மனு விசாரணைக்கு வந்த போது சம்பந்தப்பட்ட கோர்ட்டில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் துணை மேயர் மன்னன் மதுரை 3-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் கதிரவன் (பொறுப்பு) முன்பு நேற்று சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்