முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்பு மனு தாக்கல்விதிகளை ரங்கசாமி மீறி விட்டார்அ.தி.மு.க. குற்றச்சாட்டு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுச்சேரி, செப்.- 28 - வேட்பு மனு தாக்கலின் போது முதல்வர் ரங்கசாமி விதிகளை மீறி விட்டார் என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. புதுவை மாநிலம் இந்திராநகர் தொகுதியில் வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாளாகும்.  வேட்பு மனு தாக்கலுக்காக என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்செல்வனுடன், முதல்வர் ரங்கசாமி காரில் தொழிலாளர் துறை அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவரின் காரை சூழ்ந்து கொண்டு தொண்டர்களும் தொழிலாளர் துறை அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.  அலுவலக வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு வேட்பாளருடன் சென்று முதல்வர் ரங்கசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரும், முதல்வர் ரங்கசாமியும் தேர்தல் விதிகலை மீறியதாக அ.தி.மு.க. உள்பட பல கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.  அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- மனுதாக்கலின் போது முதல்வர் ரங்கசாமி தேர்தல் விதிகளை மீறியுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் துறை மற்றும் காவல் துறையினர் துணை நிற்கின்றனர். அலுவலக வளாகத்திற்குள் காரில் சென்றுள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்குள் பலரும் அத்துமீறி நுழைந்துள்ளனர்.  இதனை போலீசார் தடுக்கவில்லை. தேர்தல் துறையும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. முதல்வர் ரங்கசாமி ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றார். இதனால் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் துணை ராணுவ படையினரை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். அப்போது தான் தேர்தல் நேர்மையாக நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்