முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில் வருகிற அக்.1ந் தேதிஉலகதமிழர் பொருளாதார மாநாடு மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப். - 28 -  துபாயில் வருகிற அக்டோபர் 1ந் தேதி  உலக தமிழர் பொருளாதார மாநாடு  நடைபெறுகிறது .இதில்  இந்திய அரசின் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர் .இது குறித்து உலக தமிழர் பொருளாதார அமைப்பின் நிறுவனர் சம்பத் கூறியதாவது:  அக்டோபர் 1ந்தேதி முதல் 4ந்தேதி வரை உலக தமிழர் பொருளாதார மாநாடு துபாயில் நடக்கிறது.   இம்மாநாட்டில் 3 ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர்கள் சரத்குமார் எஸ்.வி.சேகர், இயக்குனர் பாரதிராஜா, கலைப்புலி தானு ஆகிய திரைஉலக பிரபலங்கள் பொருளாதார பிரச்சனை குறித்தும் பேசுகிறார்கள்.மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி மாநாட்டினைத் தொடங்கிவைக்கிறார்கள்.  மலேசியா முன்னாள் அமைச்சரும் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசிய நாட்டுச் சிறப்புத் தூதருமான டத்தோ. ஸ்ரீ.எஸ்.சாமிவேலு மாநாட்டின் தொடக்க விழாவிற்கு  தலைமை தாங்குகிறார்.   விழாவின் தொடக்க விழாவில் யு.ஏ.இ. நாட்டிற்கான இந்தியத் தூதர் எம்.கே.லோகேஷ்  வாழ்த்துரை வழங்குகிறார்.   பொருளாதார மாநாட்டில் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்கு தொடங்கி நாள் முழுவதும் நடைபெறும்.  ஒவ்வொரு நாளும் நான்கு அமர்வுகள்  இடம்பெறுகின்றன.  ஒவ்வொரு அமர்விலும் பொருளாதார மேம்பாடுகள் குறித்து முக்கியமான தலைப்புகளில் கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு விவாதங்கள் நிகழ்கின்றன.மாநாட்டு நிறைவு விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்குச் சிறப்பாகப் பணிபுரிந்தர்களுக்கு உலகத் தமிழர் மாமணி என்ற விருது வழக்கப்பட உள்ளது.
  துபாய் மாநாட்டு நிறைவு விழாவிற்கு  இந்திய அரசின் மத்திய வெளிவுறவுத் துறை அமைச்சர் இ.அகமது தலைமை தாங்குகிறார்.  புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் டாக்டர் இக்பால் சிங் விருது வழங்குகிறார்.  ஆர்க்காட்டு இளவரசர்  நவாப்முகமது அப்துல் அலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  பிரபல கருநாடக இசைக்கலைஞர்  நித்யஸ்ரீ மகா தேவனின் இசை நிகழ்ச்சி  2.10.2011   நடைபெறகிறது.  பிரபல பரதநாட்டியக் கலைஞர்கள் சொர்ணமால்யா, ஷோபனா ரமேஷ் மற்றும் சுமித்தா மாதவ் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  பத்மினி கிருஷ்ணமூர்த்தியின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.
இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் 25 க்கும் மேலான நாடுகளில் இருந்து ஏறக்குறைய 500 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்