முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுக்கு கூடுதலாக 9 பேர்கள் நியமனம் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.- 29 - திருச்சி மேற்கு சட்டபேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழுவுக்கு ஓ.பி.எஸ், செங்கோட்டையன் உட்பட 16 பேர்கள் நியமனம் செய்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஏற்கனவே அறிவுப்பு வெளியிட்டிருந்தார். தற்போது 9 பேர்களை கூடுதலாக நியமித்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்ற இடைத் தேர்தல் ​ 2011 திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் ஏற்கெனவே 16 பேர்களைக் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தார்கள்.  கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கே.டி.பச்சைமால் - (கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் வனத் துறை அமைச்சர்),  அ. தமிழ்மகன் உசேன் -  (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்),   பொள்ளாச்சி வ. ஜெயராமன், எம்.எல்.ஏ., - கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்,  டாக்டர் வெ. சரோஜா - கழக மகளிர் அணி இணைச் செயலாளர்,   ஏ. பாப்பாசுந்தரம், எம்.எல்.ஏ., - கரூர் மாவட்டக் கழக அவைத் தலைவர் முன்னாள் அமைச்சர்,   துரை. மணிவேல், எம்.எல்.ஏ., - அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர்,  எஸ். காமராஜ், எம்.எல்.ஏ., - கரூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்,   ப. குமார், எம்.பி.,  ஏ. வில்லியம் ரபி பெர்னார்ட், எம்.பி.,  கட்சி நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.         
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்