முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா தாக்கினால் பாக். திருப்பித் தாக்குமாம்

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.- 29 - பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க படைகளை திருப்பித் தாக்குவோம் என்று பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அமெரிக்க எம்.பி. ஒருவர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகள் அதிகம்பேர் உள்ளனர். அவர்கள் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் பதுங்கிக் கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில் ஆப்கான் முன்னாள் அதிபர் ரப்பானியை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். இந்த படுகொலைக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உடந்தையாக உள்ளது என்பதை அமெரிக்கா கண்டுபிடித்து எச்சரித்தது. இதையடுத்து தீவிரவாதிகளுடனான உறவை பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடனடியாக முறித்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையால் பாகிஸ்தான் கலக்கமடைந்துள்ளது. தீவிரவாதிகளுடனான ஐ.எஸ்.ஐ.யின் தொடர்பை துண்டிக்காவிட்டால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த நிலையில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க படைகள் மீது பதிலடி தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க எம்.பி. ஒருவர் கூறியுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்துக்குள் ஹெலிகாப்டர்களில் வந்திறங்கிய அமெரிக்க வீரர்கள் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொலை செய்ததை பாகிஸ்தான் அரசு வன்மையாக கண்டித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுப்பது பாகிஸ்தானுக்கு பெருத்த கோபத்தை உண்டாக்கியுள்ளது. எங்களது மண்ணில் ஒருதலைப்பட்சமாக அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தினால் அதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று அந்த பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்