முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. உதவி செய்ததற்கான ஆதாரம் உள்ளது அமெரிக்கா அறிவிப்பு

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.- 29 - தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. நிதி உதவி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானில் உள்ள ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கும் பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. உதவி செய்து வருகிறது. இதை ஐ.எஸ்.ஐ. நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நிதி உதவியை குறைக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ உயரதிகாரி மைக் முல்லன் தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் கடுமையாக பதில் அளித்திருந்தது.
இந்தநிலையில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கும் ஐ.எஸ்.ஐ. நிதி உதவி செய்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்று அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹக்கானி தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி, ஆட்கள் உதவி, ஆயுதங்கள் தயாரிக்க தொழில்நுட்ப உதவிகள் ஆகியவைகளை ஐ.எஸ்.ஐ. வழங்கியதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்று அமெரிக்க பெண்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை தீவிரவாத சொர்க்க பூமியாக செயல்படுவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் பெரும் உதவியும் வசதியும் செய்து கொடுக்கிறார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார். அந்த அதிகாரி தன்னுடைய பெயரை கூறிக்கொள்ள விரும்பவில்லை. தீவிரவாத அமைப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ. உதவியதற்கான ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு நீண்டகாலமாக கொடுத்து வருகிறோம். காபூலில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விஷயம் மிகவும் எல்லையை மீறிய செயல். அதனால்தான் எங்களால் பொறுக்க முடியாமல் ஐ.எஸ்.ஐ. தொடர்பை வெளிப்படுத்தினோம் என்றும் மற்றொரு அமெரிக்க அதிகாரி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்