முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் கலெக்டர்சகாயம் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.- 29 - மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் நன்டைத்தை விதிகள், சட்டம் ஒழுங்கு குறித்து முன்னேற்பாட்டுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ராகார்க் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் மாவட்ட  தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டர் உ.சகாயம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சகாயம் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் எந்த அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளரோ ல்லது முகவரோ வேறு சாதியினரோ, மதத்தினரோ அல்லது பல்வேறு மொழி பேசும் இனத்தினர் ஆகியோரிடையே வேற்றுமைகளை  ஏற்படுத்துவதோ அல்லது மனக்கசப்பை உண்டாக்க கூடாது. சாதி, மத, இன உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேண்டுகோள் விடுக்கக் கூடாது. வழிபாட்டு தளங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தக்கூடாது.  சாதி மத இன உணர்வுகளை தூண்டும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேண்டுகோள் விடுக்க கூடாது. கொள்கைகளை பற்றிய விமர்சனங்கள் மட்டுமே இருக்க வேண்டும். தனி நபர் விமர்சனங்களை தவிர்த்திட  வேண்டும். லஞ்சமோ, வெகுமதியோவாக்காளர்களுக்கு வழங்க கூடாது. வாக்களர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதில் குறுக்கிட கூடாது.  மதச்சின்னம், தேசிய கொடி, தேசிய சின்னம் ஆகியவற்றை தேர்தல் காரியாலங்களில் பயன்படுத்தக்கூடாது. கூடுகின்ற கூட்டங்களில் மது பானம்,போதை தரக்கூடியவைகளை தடை செய்யப்பட்டுள்ளது. அசடிப்பவர்கள்,வெளியீட்டாளர்கள் அவர்களுடைய பெயர்களை தெரிவித்திட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்