முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைஅ.தி.மு.க. வேட்பாளர்சைதை துரைசாமியை ஆதரித்துஓ.பி.எஸ் செங்கோட்டையன் பிரசாரம்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.- 29 - சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து சோழிங்கநல்லூர் பகுதியில் அமைச்சர்கள் பிரசாரம் செய்தார்கள். சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக சைதை துரைசாமி போட்டியிடுகிறார்.   அவருக்கு ஆதரவாக சோழிங்கநல்லூர் மண்டலத்தில் அடங்கிய 200-வது வார்டான செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் இருந்து பிரசாரம் தொடங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், டி.கே.எம்.சின்னையா, அவைத்தலைவர் இ.மதுசூதனன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பா.வளர்மதி, கே.பி.கந்தன் ஆகியோர் கலந்து கொண்டு  பிரசாரத்தை தொடங்கி வைத்தார்கள்.  மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் அடங்கிய வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாராயணன், முஸ்தபா, என்.சுந்தரம், எஸ்.பாஸ்கர், டி.சி.கோவிந்தசாமி ஆகியோரை அறிமுகப்படுத்தினார்கள். பின்னர் வேட்பாளருடன், அமைச்சர்கள் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு கேட்டார்கள். மேயர் பதவி வேட்பாளர் சைதை துரைசாமி செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கண்ணகிநகர், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அந்தந்த வார்டு வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: இந்த பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடவும், மக்களுக்காக பணியாற்றிடவும், அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.  முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒட்டுமொத்த மக்களின் அசைக்கமுடியாத மகாசக்தியாக அரியணையில் அமர்ந்து ஏழை,எளிய மக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.  இந்தியாவே வியந்து திரும்பி பார்க்கின்ற ஆற்றல் மிக்கவர் நம் முதல் -அமைச்சர்.  இந்த பகுதி பொதுமக்களின் அடிப்படைவசதிகளை பூர்த்தி செய்ய எங்களை பிரதிநிதிகளாக நிறுத்தியுள்ளார்கள்.  நாங்கள் வெற்றி பெற்றால் நீங்கள் எல்லா வசதிகளையும் பெறமுடியும்.  தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றவும் அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

 

ஊச்ச்சி சச்சிடீ

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து அமைச்சர்கள ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், சின்னையா, அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி. ஆகியோர் பிரச்சாரம் செய்தபோது எடுத்தபடம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்