முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசியில் நடந்த வருண்காந்தி திருமணம் சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

வாரணாசி,மார்ச்.- 7 - சஞ்சய் காந்தியின் மகனும், எம்.பியுமான வருண்காந்திக்கும், மேற்கு வங்கத்தை சேர்ந்த கிராபிக் டிசைனர் யாமினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணம் நேற்று காலை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி காமகோடி அனுமார்கோவிலில் நடந்தது.  திருமண நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு 9 மணி வரை நடந்தது. மணமகன் வருண்காந்தி, பட்டு வேட்டியும், ஆரஞ்சு நிற பட்டு குர்தாவும் அணிந்திருந்தார். மணமகள் யாமினி இந்திரா காந்தி 40 வருடத்திற்கு முன்பு மேனகாவிற்கு பரிசாக கொடுத்த சேலையை கட்டியிருந்தார். மணமகனின் தாயார் மேனகா, மணமகளின் தாயார் அருணாவாசுதேவ் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ராஜீவ் காந்தி குடும்பத்தில் இருந்து ராகுல், பிரியங்கா ஆகியோர் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாருமே வரவில்லை. வருண் காந்தி திருமண வரவேற்பு நாளை நடப்பதாக இருந்தது. சமீபத்தில் மேனகா காந்தியின் தாயார் இறந்ததால் வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony