முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்ப்யூட்டர் உலகின் வேந்தன் ஆப்பிள் நிறுவனர் மரணம்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

சான்பிரான்சிஸ்கோ, அக்.7 - கம்ப்யூட்டர் உலகில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீபன் பால்ஜாப்ஸ் பரிதாபமாக இறந்தார். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு வயது 56. கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு எலக்ட்ரானிக்ஸ் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் தனது பள்ளி நண்பர் ஸ்டீபன் ஓஸ்னியாக் என்பவருடன் கூட்டு சேர்ந்து 1976 ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார். கம்ப்யூட்டர் உலகில் மிக சிறந்த நிபுணர்களை ஊக்கப்படுத்தி பல புதிய பொருட்களை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். ஐ பாட், ஐபேட், ஐபோன் போன்ற பல நவீன பொருட்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி குறைந்த வயதிலேயே பெரும் கோடீஸ்வரரானார். கம்ப்யூட்டர் துறை மட்டுமல்லாமல் இசை துறையிலும் அனிமேஷன் துறையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. ஆயிரம் பாடல்களை பதிவு செய்யும் ஐபாட் 2001 ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது இசை ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இந்நிலையில் கலிபோர்னியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் பால்ஜாப்ஸ் நேற்று காலமானார். இவருடைய மறைவுக்கு உலக தலைவர்கள் அனைவரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்