முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9-ந் தேதி தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.7 - 9-ந்தேதி நடைபெற இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகரனை எதிர்த்து கே.ஆர். போட்டியிடுகிறார். துணைத் தலைவர்களாக சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன், டி.சிவா ஆகியோரும், செயலாளர்களாக கே.முரளிதரன், ஏ.எம்.ரத்னம் ஆகியோரும், பொருளாளராக அன்பாலயா பிரபாகரனும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கமீலாநாசர், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஞானவேல்ராஜா, கே. பாலு, அழகன் தமிழ்மணி, ஆபாவாணன், கே.விஜயகுமார், எம்.கபார், எச்.முரளி, என்.சுபாஷ் சந்திரபோஸ், கே.முருகன், எஸ்.எஸ்.துரைராஜ், ருக்குமாங்கதன், ரவீந்திரன், ஏ.என்.சுந்தரேசன், ராஜேந்திரன், நந்தகோபால், விஜயமுரளி, மன்னன், பி.ஜி.பாலாஜி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கே.ஆர். அணி வென்றால் தயாரிப்பு செலவு குறைக்கப்படும், தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், டி.வி., கேபிள் டி.வி.யில் இருந்து ரூ. 10 லட்சம் சிறு முதலீட்டு படங்களுக்கு கிடைக்க வழி செய்யப்படும், தயாரிப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும் என்பன போன்ற தேர்தல் வாக்குறுதிகள் வெளியிட்டு உள்ளனர்.

அதேபோல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன் போட்டியிடுகிறார். எஸ். ஏ. சந்திரசேகரன் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கதிரேசன் ஆகியோரும் செயலாளர் பதவிக்கு கே.ஆர்.ஜி., தேனப்பன் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கலைப்புலி தாணுவும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கோவைதம்பி, சங்கிலி முருகன், ராதாரவி, எடிட்டர் மோகன், அமுதா துரை ராஜ், மனோஜ்குமார், சந்திர பிரகாஷ் ஜெயின், ஆர்.கே. செல்வமணி, வி.சேகர், பவித்ரன், மாதேஷ், சுப்பையா, கோட்டைக்குமார், பட்டியல் சேகர், கிச்சா, சாலை சகாதேவன், பாஸ்கர், ரிஷிராஜ், ஷக்தி சிதம்பரம், கருணாஸ், பி.டி.செல்வகுமார், ஆகிய 21 பேரும் போட்டியிடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago