முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க படை தாக்குதலில் தலிபான் இயக்க தளபதி பலி

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், அக்.7  - பாகிஸ்தான் நாட்டின் தெற்கு வஜ்ரிஸ்தான் பழங்குடியின பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி ஹலிமுல்லா கொல்லப்பட்டார். அவருடன் சேர்த்து மேலும் 3 தீவிரவாதிகளும் இந்த தாக்குதலில் பலியானார்கள். மவுலி நசீர் தலைமையிலான தலிபான் இயக்கத்தை சேர்ந்த மிக முக்கியமான தளபதியாக ஹலிமுல்லா கருதப்படுகிறார். எனவே ஹலிமுல்லாவின் இழப்பு அந்த இயக்கத்தை பொறுத்தவரையில் பெரும் இழப்பாகும் என்று தலிபான் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தி நியூஸ் டெய்லி பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்