முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

நாகர்கோவில், செப் 9 - தி.மு.க முன்னாள் அமைச்சர் சுரேராஜன் - உறவினர் வீடுகள் உட்பட 7 இடங்களில் லஞ்சஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். இவர் குமரி மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் புகார்கள் வந்தன. இது தொடர்பாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையில்  ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து சுரேஷ் ராஜன் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(2),13(1) (இ) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் நேற்று காலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்ட டிஎஸ்பிக்கள் மற்றும் 100 போலீசார் கொண்ட குழுவினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

நாகர்கோவில் நகரம் ராமவர்மபுரம் வெள்ளாளர் காலனியில் உள்ள சுரேஷ் ராஜனின் வீடு, பர்வதவர்த்தினி தெருவில் உள்ள அவரது அக்கா வீடு, கோட்டாறு செட்டி தெருவில் உள்ள அவரது மாமியார் வீடு, எறும்புகாட்டில் செயல்பட்டுவரும் அவருக்கு சொந்தமான மீன்வலை கம்பெனி, நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ள அவரது என்.எஸ்.கே ஸ்டீல் கம்பெனி, ராமவர்மபுரத்தில் உள்ள என்.எஸ்.கே. ஸ்டீல் அலுவலகம், ஆகிய 7 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. சுரேஷ் ராஜன் மற்றும் அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்