முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 பெண்கள் - கேரளாவிபச்சார புரோக்கர்கள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.9 -சென்னையில் பிரபல ஸ்டார் ஓட்டல் மற்றும் கெஸ்ட் ஹவுஸ்களில் விபச்சாரம் செய்த கேரளாவை சேர்ந்த 6 விபச்சார புரோக்கர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.சென்னை மாநகரில் ஸ்டார் ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் பங்களா வீடுகளில் ரகசியமாக விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், அப்பாவி இளம்பெண்களை மீட்கவும், சென்னை காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதி, மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் அபய் குமார்சிங்,  ஆணையின்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் ஏ.ராதிகா மற்றும் கூடுதல் துணை ஆணையாளர் டாக்டர்.எம்.சுதாகர் ஆகியோர் அறிவுரைகளின்படி, சென்னை விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் எம்.கிங்ஸ்லின் மேற்பார்வையில் ஆய்வாளர் எஸ்.சாண்டியாகோ, தலைமையில் போலீஸ் பார்ட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் லாட்ஜ்களில் நேற்று இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை தி.நகரில் பிரபல ஸ்டார் ஓட்டல் மற்றும் வடபழனியில் பிரபல கெஸ்ட் ஹவுசில் கேரளாவை சேர்ந்த அஸ்லாம் (23), ரணீஷ் (25), அர்ஷத் (25), சுஹைப் (24), ஷாவேஸ் (26), மற்றும் முகமது சவாது (22), ஆகியோரை கொண்ட கும்பல் பீகார், மும்பை மற்றும் ஆந்திராவை சேர்ந்த நான்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவரவே புரோக்கர்கள் ஆறு பேர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிக்கியிருந்த நான்கு இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.

மேலும் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி சென்னை அண்ணாநகரில் ஒரு பங்களா வீட்டில் மசாஜ் செண்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்த திருவேணி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பாலாஜி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதே போன்று சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் விபச்சார புரோக்கர்களான மாதவரத்தை சேர்ந்த பாத்திமா மூலக்கடையை சேர்ந்த பரீதா பானு, வேளச்சேரியை சேர்ந்த சிவா, மற்றும் குமரன் நகரை சேர்ந்த சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த 10 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் சைதாப்பேட்டை 4-வது பெருநகர குற்றவியல் நடுவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். மீட்கப்பட்ட இளம் அழகிகள் மைலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள். மேற்படி தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்த ஆய்வாளர் தலைமையிலான விபச்சார தடுப்பு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்