முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டு சீட்டு - மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.9 - வாக்காளர்களுக்கான வாக்குச் சாவடி துண்டுச் சீட்டு வழங்கும் பணியினை நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர் தா. கார்த்திகேயன், தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி துண்டு சீட்டுகள் 15 மண்டலத்தில் உள்ள 22,42,656 ஆண் வாக்காளர்களுக்கும், 22,06,085 பெண் வாக்காளர்களுக்கும், 314 பிறர் வாக்காளர்களுக்கும் ஆகமொத்தம் 44,49,055 வாக்காளர்களுக்கு துண்டுச் சீட்டுகள் வழங்கும் பணியினை தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான தா. கார்த்திகேயன், நேற்று (8.10.2011) எழும்nullர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துளசிங்கம் தெருவில் தொடங்கி வைத்தார்.   மேலும் ஆணையர் தெரிவிக்கையில், இத்துண்டுச் சீட்டுகள் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் ஆகியோருக்கு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் எளிதில் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் புகைப்படம், வாக்காளர் பெயர், வாக்குச் சாவடி எண். வாக்குச் சாவடி முகவரி ஆகிய அனைத்து விவரங்கள் இத்துண்டு சீட்டில் இடம் பெறுவதால் வாக்காளர்கள் எந்தவித குழப்பமின்றி எளிதில் வாக்களிக்க ஏதுவாக இருக்கும். துண்டுச் சீட்டு வழங்கும் பணி இன்று முதல்  ( 8.10.2011 ) தொடங்கி இன்னும் 3 நாட்களுக்குள்  வாக்காளர்களின் வீட்டிற்கே நேரில் வந்து விநியோகிப்பார்கள். இத்துண்டுச் சீட்டு வழங்கும் பணியில் 4 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். துண்டுச் சீட்டு கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் சென்னை மாநகராட்சி புகார் பிரிவில் இயங்கும் 1913 என்ற தொலைப்பேசி மூலம் புகார் தெரிவித்து துண்டுச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம். அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் 1800​425​2011 என்ற தொலைப்பேசி மூலம் புகார் தெரிவித்தால் வாக்காளர்களுக்கு இத்துண்டுச் சீட்டு வழங்கப்படும். மேலும், வாக்காளர்கள் வாக்குப் பதிவின் போது அந்தந்த வாக்குச் சாவடி அருகில் துண்டு சீட்டு வழங்குவதற்கென தனியாக ஒரு பணியாளர் நியமிக்கப்படுவார். வாக்காளர்கள், அந்த பணியாளரிடம் தங்கள் பெயர், வீட்டு எண். வசிக்கும் தெரு ஆகிய விவரங்களை தெரிவித்து, துண்டுச் சீட்டுகள் பெறலாம். 

இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony