முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - இங்கிலாந்து கடற்படைகள் கூட்டுப் பயிற்சி

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக்.9 - இந்தியா, இங்கிலாந்து கடற்படைகளின் வருடாந்திர கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. கொங்கண் என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டுப் பயிற்சியில் அணு விசையில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களும் இடம் பெறுகின்றன. இந்தியாவில் ஐ.என்.எஸ். , ஷங்குஷ் மற்றும் இங்கிலாந்தின் டிரபால்கர் வகை நீர்மூழ்கி கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவிடம் இருந்து நெர்பா கே. 152 என்ற அணுவிசை நீர்மூழ்கி கப்பலை பெறவுள்ள நிலையில் அணுவிசை நீர்மூழ்கி கப்பல்களை கையாள்வதற்கான தனித்த பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்தியா, வங்கதேசம் இடையே முதல் முறையாக ராணுவ கூட்டு பயிற்சி நடைபெறவுள்ளது. வங்கதேசத்தில் சில்ஹெட் பகுதியில் நடைபெறவுள்ள இந்த கூட்டு பயிற்சிக்கு ஆபரேசன் சம்ப்ரிதி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்