முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரியாவில் பிரதீபா பாட்டீலுக்கு உற்சாக வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

சாம்ஸ்பார்க், அக்.9 - ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ஆஸ்திரியா நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இசை மேதை மொஸார்ட் ஆகியோரது அருங்காட்சியகங்களை பார்வையிட்டார். சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரின் நெருக்கமான சாலையில் ஐன்ஸ்டீனின் வீட்டை பிரதீபா பார்வையிட்டார். அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட ஐன்ஸ்டீனின் வீடு சிறிய உணவகத்தை போல காட்சியளித்தது. பின்னர் ஆஸ்திரியா நாட்டுக்கு சென்ற பிரதீபா பாட்டீல் சால்ஸ்பர்க் நகரில் உள்ள இசை மேதை வோல்ப் காங், அமெதியாஸ் மொஸார்ட்டின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். பிரதீபா பாட்டீலுக்கு சால்ஸ்பர்க் நகர ஆளுனர் விருந்தளித்தார். இது குறித்து ஜனாதிபதி கூறுகையில், 

மொஸார்ட் வாழ்ந்த நகருக்கு வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். முன்னதாக சால்ஸ்பர்க் விமான நிலையத்தில் ஆஸ்திரியா நாட்டின் அதிபர் ஹெய்ன்ஸ் பிஷர், அவரது மனைவி மற்றும் சால்ஸ் பார்க் ஆளுனர் ஆகியோர் பிரதீபா பாட்டீலுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். இந்த பயணத்தின் போது சுவிட்சர்லாந்தில் இரட்டை வரி விதிப்பு தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற முயற்சிக்கும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago