முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானை பலவீனப்படுத்துவதே இந்தியாவின் நோக்கமாம்: முசாரப்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், அக்.- 10 - பாகிஸ்தானை பலவீனப்படுத்துவதன் மூலம் அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியும் என்று இந்தியா கருதுகிறது. ஆப்கனில் இந்தியா மேற்கொள்ளும் வளர்ச்சி திட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவே உள்ளது என்று பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசாரப் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,  பாகிஸ்தானுக்கு எதிரான ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்று கருதும் இந்தியாவின் எண்ணம் ஈடேறாது. அண்டை நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகள் உள்ளன. பாகிஸ்தானை பலவீனப்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானை இந்தியா ஒரு போதும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.  ஆப்கனில் இந்தியா மேற்கொள்ளும் வளர்ச்சி திட்ட பணிகளை அமெரிக்க தலையிட்டு நிறுத்த வேண்டும். ஆப்கன் ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி தரப்படுகிறது. இதன் மூலம் ஆப்கனை பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பலாம் என்று அது கருதுகிறது. பாகிஸ்தானுடைய நிலைமையை கருத்தில் கொண்டு அமெரிக்கா இந்தியாவின் செயல்பாடுகளை தடுக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு சண்டைகளும், குழப்பங்களும் நீடித்து கொண்டே இருக்கிறது. இது கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்