முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் குடும்பத்தினர்களை திரும்ப அழைக்க வேண்டும் சவூதிக்கு பாக்.வேண்டுகோள்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,அக்.- 10 - பின்லேடன் குடும்பத்தை சேர்ந்தவர்களை திரும்ப அழைத்து குடியமர்த்த வேண்டும் என்று சவூதி அரேபியா மற்றும் ஏமன் நாடுகளின் அரசுகளை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது.  அமெரிக்காவை தாக்கிய அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தலைவனை ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தேடி அலைந்த அமெரிக்கா படை, இறுதியாக பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்திற்கு அருகே அடிதாபாத்தில் ராணுவ மையத்திற்கு அருகே ஒரு சொகுசு பங்களாவில் மறைந்திருந்த பின்லேடனை சுட்டுக்கொலை செய்தது. அவனது உடலை ஹெலிகாப்டரில் எடுத்துச்சென்று கடலில் தூக்கி எறிந்தது. அதோடு மட்டுமல்லாமல் தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் ஒழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அமெரிக்காவிடம் ஏராளமான உதவிகளை பெற்று வந்த பாகிஸ்தானிலேயே பின்லேடன் பதுங்கி இருந்தது அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு உதவிகளை குறைப்பது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான், பின்லேடன் குடும்பத்திற்கு தொடர்ந்து பாதுகாப்பு கொடுத்து வந்தால் அமெரிக்காவின் கோபத்திற்கு மேலும் ஆளாக வேண்டிவரும் என்று கருதும் பாகிஸ்தான், பின்லேடன் குடும்பத்தினர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. அதனால் பின்லேடனின் சொந்த நாடான சவூதி அரேபியாவுக்கும் அவனது 3 மனைவிகள் மற்றும் பிள்ளைகளை ஏமனுக்கும் அனுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதனையொட்டி பின்லேடன் குடும்பத்தினர்களை அழைக்குமாறு சவூதி மற்றும் ஏமன் நாடுகளின் அரசுகளை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அந்த அதிகாரி தன்னுடைய பெயரை கூறிக்கொள்ள விரும்பவில்லை. பின்லேடன் மற்றும் அவர்களது குடும்ப சூழ்நிலை குறித்தும் அவர்களின் விபரம் குறித்தும் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி அறிந்துள்ளனர். இனிமேல் அவர்கள் தங்கள் நாட்டில் இருந்தால் தலைவலி என்று பாகிஸ்தான் கருதுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்