முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

லாகூர்,அக்.- 11 - பாகிஸ்தானில் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு மனித உரிமை கமிஷன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.  ஒருவரை கொலை செய்ய மற்றொருவருக்கு உரிமை இல்லை. அதேசமயத்தில் கொலை செய்தவரை கொல்ல மற்றொருவருக்கோ அரசுக்கோ உரிமை இல்லை என்ற வாதம் தற்போது தலைதூக்கி வருகிறது. பாகிஸ்தானில் தூக்குத்தண்டனையை ரத்து செய்யப்படும் என்று அந்த நாட்டு அரசு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் வெறும் வாய் உறுதிமொழி அளவிலேயே இருக்கிறது. இதை அமுல்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை அந்த நாட்டு உயர்ந்த அமைப்பான மனித உரிமை கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. தூக்குத்தண்டனை எதிர்ப்பு தினம் நேற்றுமுன்தினம் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. அதனையொட்டி இந்த வேண்டுகோளை பாகிஸ்தான் மனித உரிமை கமிஷன் விடுத்துள்ளது. சட்ட விதிமுறைகளில் குறைபாடுகள், ஊழல்கள், கலாசார அநீதி ஆகியவைகளால் பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இது நாகரீகமான சமுதாயத்தில் அனுமதிக்க முடியாததாகும் என்று பாகிஸ்தான் மனித உரிமை கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து நாட்டில் தூக்குத்தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதில் அரசு உறுதியாக இருப்பது பாராட்டக்கூடியது. அதேசமயத்தில் பாகிஸ்தான் அரசியல் சட்டத்தில் 12-க்கும் மேற்பட்ட குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதைவைத்து பாகிஸ்தான் கோர்ட்டுகள் தூக்குத்தண்டனையை விதித்து வருவது கவலை அளிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்