முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர் பிரச்சினை: ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவு செயலர் சந்திப்பு

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

கொழும்பு, அக். - 12 - இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மத்தாய் கொழும்பில் சந்தித்து பேசினார்.  தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தும் விவகாரத்தை மத்தாய் அப்போது எழுப்பினார். வாழ்வாதாரத்திற்காக இரு நாட்டு மீனவர்களும் ஆழ்கடலில் மீன் பிடித்து வருகின்றனர். இதில் வன்முறைக்கு ஒரு போதும் இடம் அளிக்கக் கூடாது என்றும் மத்தாய் வலியுறுத்தினார்.  இதற்கு பதிலளித்த இலங்கை அதிகாரிகள், தமிழக மீனவர்களை தாக்க கூடாது என்று கடற்படையினருக்கு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளோம். அது போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர். இலங்கை செல்லும் முன்பு தமிழக முதல்வரை சந்தித்த மத்தாயிடம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா தனது கண்டனத்தை தெரிவித்தார்.  இது குறித்து மத்தாய் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறும் போது, இது இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை. இரு நாடுகளை சேர்ந்த மீனவர்களும் சந்தித்து பேசி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். மீன் பிடி பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றார். மேலும் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது குறித்து தமிழ் தேசிய கூட்டணியோடு பேசி வருவதாகவும் வடக்கு பிராந்திய கவுன்சிலுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் ராஜபக்சே கூறியதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்