முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களை ஏமாற்றிய தி.மு.க. மாநகராட்சி நிர்வாகம்

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் அக்.14 - சேலம் மாநகராட்சிக்கு அத்தியாவசிய தேவையான தனி கூட்டு குடிதண்ணீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், திருமணிமுத்தாறு அபிவிருத்தி திட்டங்களை பொதுமக்களுக்கு நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து குடிதண்ணீர் கட்டணத்தையும், டெபாசிட் தொகையையும் உயர்த்தி இதுவரை எந்த  திட்டத்தையும் நிறைவேற்றாமல் கடந்த 5 ஆண்டுகாலமாக மக்களை ஏமாற்றியுள்ளது தி.மு.க.மாநகராட்சி நிர்வாகம்.

சேலம் மாநகரம் கடந்த 1995 வரை சேலம் நகராட்சியாக இருந்தது. 1995 ல் தி.மு.க.ஆட்சியின் போது சேலம் நகராட்சியையும், அருகில் உள்ள சூரமங்கலம் நகராட்சியையும் இணைத்து 60 வார்டுகள் கொண்ட மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டபோது சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையே  இருந்தது. 

கடந்த 96 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த மாநகராட்சியை  தி.மு.க.கைப்பற்றியது. அதன் மேயராக டாக்டர் சூடாமணி பதவி வகித்தார்.96-   2001 ல் காலத்தில் தி.மு.க.நிர்வாகத்தில் நடந்த ஆழ்துளை கிணறு ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் பிரச்சனை, ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட பிரச்சனை சிக்கல்களால் 2001 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த மாநகராட்சி அ.தி.மு.க.வசமானது.அப்போது சுரேஷ்குமார் மேயராக பதவி வகித்தார். அ.தி.மு.க.காலத்தில்தான் சேலம் மாநகராட்சிக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. சாலைவசதிகள், சேலம் மாநகராட்சியாக இணைக்கப்பட்ட பின் நகர மலை அடிவாரம், குரங்குசாவடி, கொண்டலாம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் பயன்பெற குடிதண்ணீர் மேல்நிலைத் தொட்டிகள் என பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க.வின் 5 வருட காலத்தில் சுமார் 63 கோடி ரூபாய் மாநகரின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டது. அந்த பணத்தில்தான் தி.மு.க.நிர்வாகம் சுமார் 2007 வரை பல திட்டங்களை செயல்படுத்தியது.

2006 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் அராஜகத்தை கட்டவிழ்த்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றினர்.அதில் சேலம் மாநகராட்சியும் தி.மு.க.வசமானது. அதன் மேயராக ஜெ.ரேகா பிரியதர்ஷினி தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க.வினர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 2006 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நாங்கள் மேயரானால் தினமும் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 100 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க தனி குடிதண்ணீர் திட்டம், மாநகராட்சியின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாகவும், பாதாள சாக்கடை திட்டம், மாநகரில் நாள்தோறும் அதிகரிக்கும் குப்பை சேகரிக்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் என பல திட்டங்களை கொண்டுவருவதாக வாக்குறுதி கொடுத்தார். 2007 ல் தி.மு.க.மேயர் ரேகா பிரியதர்ஷினி பொறுப்பேற்று போடப்பட்ட பட்ஜெட் புத்தகத்திலும் இந்த  திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். அதே ஆண்டில்  தமிழக முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட 14.9.07 ல் சேலம் வந்த போது சேலம் மாநகர தனிகுடிதண்ணீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் போன்ற மாநகரின்முக்கிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

ஆனால் இது வரை அந்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 

2007 ல் பட்ஜெட்டில் தனி குடிதண்ணீர் அறிவிப்பு வந்தவுடன் அடுத்த சில மாதங்களிலேயே திட்டத்தை நிறைவேற்ற நிதி வேண்டும் என கோரி மாத குடிதண்ணீர் கட்டணம் ரூ.100 இருந்ததை ரூ.150 ஆகவும், வைப்பு தொகையை ரூ.5 ஆயிரத்தை த்தை 7.500 ஆகவும் உயர்த்தியது. இதற்கு எதிர்கட்சிகள் திட்டத்தை நிறைவேற்றிய பின் கட்டணத்தை உயர்த்தலாம் என்று சொன்னபோதிலும் தங்களுக்கு உள்ள மெஜாரிட்டையை வைத்து தீர்மானம் நிறைவேற்றி கடந்த 4 வருடங்களாக மக்களிடம் கூடுதல் குடிதண்ணீர் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். ஆனால் மாநகர எல்லைக்குள் 8 நாட்கள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது.

91.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 8.20 லட்சம் ஆகும். தொழில் நிமித்தமாக தினமும் வந்து போதும் மக்கள்,வெளி மாநிலங்களில் இருந்து படிக்க வந்துள்ள மாணவர்கள் என மாநகர மக்கள் தொகை தற்போது 9 லட்சத்தை தாண்டியுள்ளது.  மக்கள் தொகை பெருக்கத்தாலும் தண்ணீர் சப்ளை முறையாக இல்லாததாலும் தண்ணீர் பிரச்சனையை குறித்து மாநகராட்சி பகுதிகளில் பல முறை பொதுமக்கள் சாலை முற்றுகை, மாநகராட்சி முற்றுகை என பலமுறை ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளது. தண்ணீர் பிரச்சனை குறித்தும் பல முறை அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தும் இதுவரை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதே மாநகராட்சி துப்புரவு பணியும் மந்தமாகவே உள்ளது.60 கோட்டங்கள் கொண்ட மாநகராட்சியில் 21 கோட்டங்கள் அரசின் விதிகள் படி தனியாருக்கு விடப்பட்டுள்ளது.மீதம் உள்ள 39 கோட்ட துப்புரவு பணிகளை மாநகராட்சி நிர்வாகமே மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தினமும் குப்பைகள் அள்ளும் பணியில் தேக்கம் இருப்பதால் ஏராளமான குப்பைகள் தேங்கி கிடக்கிறது. தனியார் துப்புரவு நிறுவனமோ குறந்த சம்பளத்தில் ஆட்களை நியமித்து அதிக லாப நோக்கில் செயல்படுவதால் குப்பைகள் சரியாக அள்ளுவதில்லை. குப்பை அள்ளும் பணிகளை மேற்பார்வையிடும் சுகாதார ஆய்வாளர்களும் சரிவர இப்பணிகளை கண்காணிக்காமல் இருப்பதை மாநகரின் பல்வேறு இடங்களில் குப்பை கூளங்கள் காட்சி தருகின்றன. இது குறித்து பலமுறை கவுன்சிலர்கள் முறையிட்டாலும் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் மேயர் மற்றும் அதிகாரிகள் உறுதி கொடுப்பார்கள் உடனே சில நாட்கள் பணி சரியாக நடக்கும் மீண்டும் தேக்க நிலை. இப்படியாக குப்பைகளை அகற்றுவதிலும் சீராண பணிகள் இல்லை. 

கடந்த 5 ஆண்டுகளாக பட்ஜெட்டில் பக்கங்களை மாற்றி, மாற்றி  சேலம் தி.மு.க.மாநகராட்சி நிர்வாகம் எந்த பணியையும் செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறது.  2011-12 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மாநகராட்சியின் நிர்வாகத்தின் 5 வது கடைசி நிதி நிலை அறிக்கை ஆகும். சேலம் மாநகர மக்களுக்கு டி தி.மு.க.வைச் சேர்ந்த மேயரால் மாநகராட்சி நிர்வாகம் 5 ஆண்டுகளில்  எந்த ஒரு திட்டத்தையும் முழுவதுமாக நிறைவேற்ற முடியவில்லை.நகரத்தில் முழுவதும் வீட்டுவரி, வணிகவரி,தொழில் வரிகளை பல மடங்கு உயர்த்தி சேலம் மாநகர மக்களின் சுமையை திணித்து உள்ளதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.  அதே போல் 2009 ஆம் ஆண்டில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் சத்திரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். ஆனால் இந்த5 ஆண்டுகளில் இதில் எந்த பணியும் முற்றுப் பெறவில்லை. வருகின்ற சட்டமன்றதேர்தலை முன் வைத்து தனிக்குடிதண்ணீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் நடைபெறுவது  அவசர,அவசரமாக பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த பணிகள் செய்ய மாநகராட்சியில் நிதியே இல்லாத நிலைமையில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மேலும் மாநகராட்சியின் நிதி ஆதாரத்தை பெருக்க போதிய திட்டங்கள் தீட்டவில்லை. வருமானம் வரும் நிதி ஆதாரங்களை கூட கட்சியினருக்கும், அமைச்சருக்கு வேணடியவர்களுக்கும் குறைந்த விலையில் டெண்டர் கொடுத்துள்ளதால் போதிய வருவாயும் மாநகராட்சிக்கு இல்லை. உதாரணமாக சேலம் அண்ணா nullங்காவை தனியார் நிறுவனம் ஒன்று 10 வருட குத்தகைக்கு எடுத்து இருந்தது. நகரின் மையப்பகுதியில் இருக்கும் அந்த nullங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு குழந்தைகளை மகிழ்விக்க, பொதுமக்கள்  பொழுது போக்க, ராட்டிணம், ரயில், மற்றும் உணவு விடுதிகள், ஸ்நாக்ஸ் சென்டர்களும் உள்ளன. நாள்தோறும் 20 ஆயிரம் வரை வருமானமும் ஆண்டிற்கு சுமார் 50 லட்சத்திற்கும் மேல் வருமானம் வரக்கூடிய அந்த nullங்காவை அதே நிறுவத்திற்கு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு ஏலம் விட்டு மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ளவர்கள் கொலுத்த லாபம் பார்த்துள்ளனர். இதில் ஊழல் நடைப்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கூறியும் பயன் இல்லை. இன்னு தொடர்ந்து பழைய குத்தகைதாரர் வசமே nullங்கா உள்ளது. சேலம் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆனந்தா பாலம் பணிகள் 3 ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது  இதனால் மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பள்ளி, கல்லூரிகள், வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம்.

கடந்த 5 ஆண்டுகளில் சேலம் மாநகராட்சியின் அடிப்படை தேவைகளான சாக்கடை வசதி, கான்கிரீட் சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் முழுமை பெறவில்லை. தி.மு.க.கவுன்சிலர்கள் பகுதிக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கி வேண்டிய தெருக்களுக்கு மட்டும் அடிப்படை பணிகளை செய்து கொண்டனர்.

2009-2010 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான குறுகிய பாலத்தை அகலப்படுத்தப்படும் என்று சொன்னார்கள். 5 ரோடு சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், சாரதா காலேஜ் முன்புறம், குகை பெரியார் வளைவு, ஆகிய பகுதிகளில் உயர்மட்ட நடைபாதை பாலம் அமைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அமைச்சரை வைத்து அடிக்கல் நாட்டினர். ஆனால் அந்த பணிகள் இன்றுவரை துவங்கப்படவில்லை. 

மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி சிறந்த சுற்றுலா தலமாக மாற்றி nullங்கா அமைத்தல், ஏரி ஆழப்படுத்தி படகு போக்குவரத்து அமைத்தல் தங்குமிடங்கள் அமைத்தல் அறிவிப்பு இதுவரை செயல்படுத்தவில்லை.

முள்வாடி கேட் பகுதியில் இரயில்வேத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒத்துழைப்போடு மேம்பாலம் அமைக்கப்படும் என்று 2008-09 நிதி நிலை அறிக்கையில் தெரிவித்தனர். ஆனால் அந்த பணியும் நடக்கவில்லை. அம்மாபேட்டை ஏரியில் கழிவு தண்ணீர் கலக்காமல் நடவடிக்கை எடுத்து nullங்கா அமைப்பதாக சொன்னதையும் செய்யவில்லை. 

வெள்ளகுட்டை ஓடை கால்வாய் பணிகள் 5 வருட காலங்கள் ஆகியும் பணிகள் முடியாமல் கால்வாயில் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

ஏற்காடு மலையில் இருந்து வரும் மழை தண்ணீர் செல்லும் சேலம் மாநகரின் நடுவில்  செல்லும் ஆறாக திருமணி முத்தாறு இருந்தது. இந்த ஆறு நாமக்கல் மாவட்டம் வரை சென்று காவிரியில் கலக்கிறது. ஆனால் தற்போது இந்த ஆற்றில் சேலம் மாநகரில் கலக்கும் சாக்கடை கழிவுகளும், சாயப்பட்டரை கழிவுகளுமே,ஓடுகிறது. இதனால் மாநகரின் மையப்பகுதியில் ஒரே துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஆற்றை  மாநகர எல்லைவரை சீரமைத்து சரி செய்ய ரூ.31.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகள் முழுமை பெறாமல் இன்னும் மந்தமாகவே நடைப்பெற்று வருகிறது. தேர்தலை மனதில் வைத்து எல்லா பணிகளையும் துவங்கி விட்டாலும்  கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எந்த பணியையும் நிறைவேற்றவில்லை என்பது மக்கள் மனதில் பெரும் குறையாகவு உள்ளது.  இப்படி மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க.மாநகராட்சி நிர்வாகம் சொன்ன எந்த திட்டங்களையும் மக்களுக்கு நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போது தி.மு.க.மேயர் வேட்பாளர் எஸ்.டி.கலையமுதனோ நான் மேயரானால் பாதாளசாக்கடை திட்டம், திருமணி முத்தாறு திட்டம், கூட்டு குடிதண்ணீர் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதாக கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார். 

மாநகராட்சியில் வார்டுகளுக்கு ஒதுக்கப்படும் திட்டங்களை எடுக்கும் காண்டிராக்டர்களுக்கே சரி,வர நிதி ஒதுக்கி செக் வழங்காமல் கால தாமதம் படுத்துவதால் டெண்டர்கள் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் வெகுவாக குறைந்துவிட்டனர். மக்கள் நலனுக்காக திட்டங்களை அறிவித்த தி.மு.க.மாநகராட்சி அதில் போதிய அக்கறை செலுத்தாமல் வாக்களித்த மக்களை ஏமாற்றி நிர்வாகத்தில் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் மட்டும் தங்களது வசதி வாய்ப்பை பெருக்கி கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago