முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல்துறை தற்போது பொதுமக்களின் நண்பர்களாக மாறியுள்ளது

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை அக்-14 - கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரவுடிகளின் நண்பர்களாக விளங்கிய காவல்துறை தற்போது பொதுமக்களிண் நண்பணாக மாறியுள்ளது என்று நெல்லையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார். நெல்லை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று மதியம் நெல்லை 

வந்தார். நெல்லை டவுன் வாகையடி முனையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு உங்களிடம் 

கேட்டுக்கொண்டேன். எனது வேண்டுகோளை ஏற்று குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அ.தி.மு.க.வை மாபெரும் வெற்றிபெற செய்தீர்கள். இதனால் தமிழகத்தில் மக்களாட்சி மலர்ந்தது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி மலர்ந்தது. இந்த மாபெரும்

வெற்றியின் மூலம் நான் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டேன். இதற்காக உங்களுக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஆட்சி பொறுப்பேற்றவுடனே தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் 

பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், மாற்று திறனாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ரூ.500லிருந்து 1500ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித்திட்டத்தின் கீழ் 10வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25ஆயிரம் நிதிஉதவியுடன் 4கிராம் தாலி, பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50ஆயிரம் நிதியுதவியுடன் தாலிக்கு 4கிராம் தங்கம் வழங்கப்பட்டுவருகிறது. பெண் அரசு ஊழியர்கள் தனது பச்சிளங்குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு 6மாதகாலம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 

நிறைவேற்றுவதற்கென்றே  சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளும் வழங்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு மடிகணிணியும் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களின் பொருளாதார நிலையை உயர்த்திட ஆடு, மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு கேபிள் டி.வி. வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. சமூகநீதியை காக்க 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிக்க ஆணையிட்டுள்ளேன். இலங்கையில் 

இனப்படுகொலை நடத்தியவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கவேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரவுடிகளின் நண்பர்களாக விளங்கிய காவல்துறை தற்போது பொதுமக்களின் நண்பர்களாக மாறியுள்ளது. எனது ஆட்சியில் சிறந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகம் அமைதி பூங்காவாக மாறியுள்ளது. பொதுமக்களிடம் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் 

அறிவித்திருந்தேன். அதன்படி மாநிலம் முழுவதும் நில அபகரிப்பில் ஈடுபட்டுளவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 1743 நில அபகரிப்பு புகார்கள் வந்துள்ளன, 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 28 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வரை ரூ. 625 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.  தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின் தட்டுப்பாடுள்ள மாநிலமாக இருந்தது. நான் பொறுப்பேற்றுக் 

கொண்டவுடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு 

மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும். தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. தமிழகம் சுபிட்சமான பாதையில் 

செல்கிறது. குடிநீர், சாலை, சுகாதாரம், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவது உள்ளாட்சி நிர்வாகம். உள்ளாட்சியில் தேர்தலில் 

வெற்றிபெற்றால் நேர்மையான, திறமையான, ஒளிவுமறைவற்ற ஆட்சி உள்ளாட்சியில் இருக்கும். கடந்த ஆட்சியில் நெல்லை மாநகராட்சி தி.மு.க. வசமே இருந்தது. ஆனால் அவர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து கொடுக்கவில்லை. கவுன்சிலர்கள் என்றாலே அச்சம் ஏற்படுகிற வகையிலும், வெறுக்கத்தக்க நிலையிலும் நடந்து கொண்டார்கள். நெல்லையில் மாநகராட்சியில் வெற்றிபெற்றால் புதிய கூட்டு குடிநீர்த்திட்டம், புதிய பாதாள சாக்கடைத்திட்டம், வடிகால் வசதியுடன் கூடிய சாலை வசதி , சங்கரன்கோவில் சாலை-தெற்கு மவுண்ட்ரோடை இணைக்கும் புதிய இணைப்பு சாலை, மானூர் கூட்டு குடிநீர்த்திட்டம், மானூரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும். மக்களின் தேவைகளை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உங்கள் நலனுக்கெதிராக நடந்த பிரதிநிதிகளை தூக்கி எரிய உங்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

எனவே நீங்கள் நெல்லை மாநகராட்சி அ.தி.மு.க. வேட்பாளராகிய விஜிலா 

சத்யானந்த், மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்த வரலாற்று சாதனையை போன்று உள்ளாட்சி தேர்தலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துங்கள் என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago