முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: அரசு உறுதி

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.14 - நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக்கோரி தி.மு.க. வேட்பாளர்கள் 200 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால் மற்றும் டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.தி.மு.க. வேட்பாளர்கள் சார்பில் வக்கீல் என்.ஜோதி, பிரபாகரன், வில்சன் ஆகியோர் ஆஜராகி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும், இதில் முறைகேடு நடந்தால் வாக்குப்பதிவை வீடியோ படம் எடுக்க வேண்டும், வெளிமாநில 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், மத்திய போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று வாதிட்டனர். மாநில தேர்தல் ஆணையம் சார்பாக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும். இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பூத்துகளிலும் வீடியோ வசதி ஏற்படுத்த முடியாது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் மட்டுமே வீடியோ எடுக்கப்படும் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (இன்று) வழங்கப்படும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்