முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திபெத் சுயாட்சி பகுதியில் தார் சாலை அமைத்த சீனா

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.8 - இந்தியாவின் எல்லையையொட்டியுள்ள திபெத் சுயாட்சி பகுதியில் சுமார் 58 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது என்று நேற்று லோக்சபையில் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். இந்தியாவின் எல்லையையொட்டி திபெத்தின் சுயாட்சி பகுதி உள்ளது. இந்த பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. அதோடு மட்டுமல்லாது அந்த பகுதியில் சுமார் 58 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை அமைத்துள்ளது. மேலும் 5 இடங்களில் இந்தியாவை குறிவைத்து 5 இடங்களில் விமானப்படை தளங்களை அமைத்துள்ளது என்று லோக்சபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதில் அளிக்கையில் அந்தோணி கூறினார். இரண்டு நாடுகளுக்கிடையே எல்லைக்கட்டுப்பாடு கோடு விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. இருநாடுகளும் புரிந்துகொண்டு நடந்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றும் அந்தோணி கூறினார். 

கடந்த 2010-ம் ஆண்டு முடிய திபெத் சுயாட்சி பகுதியில் சீனா 58 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளை அமைத்துள்ளது. கிங்காய் திபெத் ரயில்வே நிலையத்தில் இருந்து ஜிகேஜே வரை ரயில்பாதை நீட்டிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு ரயில்பாதை கஷ்கரில் இருந்து ஹோதன் வரை போடப்பட்டு வருகிறது. தார் சாலை அமைக்கப்பட்டுள் பகுதியில் கங்கர், லின்சி,பங்க்தா, ஹோபிங் கர்குன்சா ஆகிய 5 இடங்களில் விமானப்படை தளங்களையும் சீனா அமைத்துள்ளது என்றும் அந்தோணி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்