Idhayam Matrimony

இணையதள பிரச்சாரத்திலும் சைதை துரைசாமி முன்னிலை

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.14 - சென்னை மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி நேற்று முன்தினமே 200 வார்டுகளில் முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்து முன்னிலை வகித்த அவர் இப்போது இணையதள பிரச்சாரத்திலும் முன்னிலையில் உள்ளார்.  இதுகுறித்த விபரம் வருமாறு:-   

சென்னை மாநகராட்சியின் தேர்தல் வருகின்ற 17 ந் தேதி நடைபெற உள்ளது . தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிஜிட்டல் போர்டு , வானொலி , தொலைகாட்சி, வார இதழ் , மாத இதழ் , நாளிதழ்களில் நாள் தோரும் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் .தற்பொழுது ஆன்லைன் என்று அழைக்கப்படும் இனைய தள பிரச்சாரத்திலும் சைதை துரைசாமி முன்னிலை உள்ளார் .இந்த இணைய தள பிரச்சாரத்தில் ஆர்குட், பேஸ்புக் , டிவிட்டர், ஸ்பை ,யாஹூ மெசஞ்சர் , கூகிள் சாட் போன்றவை அடங்கும் .

பேஸ்புக் என்று அழைக்கப்படும் முக நூல் ஒரு இணைய வழி சமுக அமைப்பாகும். 2004 ம் வருடம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா போலோ ஆல்டோ நகரில் துவக்கப்பட்ட இந்த அமைப்பில் உலகம் முழுவதும் 800 மில்லியன் உறுப்பினர்கள் பயனாளிகளாக பயன் பெற்று வருகின்றனர். பேஸ் புக்கில் அரசியல் , பத்திரிக்கை துறை, மருத்துவம் , கல்வி , சமுக சேவை போன்ற துறைகளின்  பிரபலமானவர்களை உலகம் முழுவதும் ஒரே அமைப்பில் இணைக்கிறது. பேஸ் புக்கில் சைதை துரைசாமி தனது மாநகராட்சி தேர்தல்  பிரச்சாரத்தை துவக்கியுள்ளார் இதில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் தகவல் அனுப்பி வருகின்றனர்கள். தற்பொழுது நிலவர படி சைதை துரைசாமியின் பேஸ் புக் இணைய தளத்தில் 53 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் புதியதாக இணைந்துள்ளனர். இவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள், பல நபர்கள் சென்னையிலும் , தமிழ்நாட்டிலும் உள்ள தனது உறவினர்கள், நண்பர்கள் மூலம் சைதை துரைசாமியின் சேவைகள் பற்றியும் ,அவரின் மனித மேய அறக்கட்டளை மூலம்  செயல்படுத்தப்படும் இலவச திருமண மண்டபம் , குறைந்த கட்டண உணவகம் , இலவச ஆம்புலன்ஸ், இலவச பிரேத பாதுகாக்கும் குளிர் சாதனப்பெட்டி, இலவச மாணவ மாணவியரின் தங்கும் விடுதி , கட்டணமில்லா ஐ.ஏ.எஸ் கல்வியகம் .இலவச நூலகம் போன்றவற்றின் செயல் பாடுகளை பற்றி தகவல் தெரிவித்து அவருக்கு நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் வாக்களித்து மேயராக தேர்தெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர் . பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் நாட்டையும்  சென்னையை சேர்ந்த தமிழர்கள் , பட்டதாரிகள் , வெளிநாடுகளில் வேலையில் உள்ளோர் சென்னையை மலேசியா , சிங்கnullர் , சவூதி போன்ற நகரங்களாக உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர் . குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த இளைஞர்களும் , பட்டதாரி இளைஞர்களும் சென்னையின் பல்வேறு பட்ட கலை அறிவியல் ,பொறியியல் கல்லூரி, பல்கலை   கழக  மானணவ  மாணவிக்க அதிக அளவு இனைந்து ஆதரவு தெரிவித்து இணையதளம் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இவர்கள் தங்களின் வாக்குகளையும் குடும்பத்தின் வாக்குகளையும் , நண்பர்களின் வாக்குகளையும் , நண்பர்களின் குடும்பத்தின் வாக்குகளை ஒட்டு மொத்தமாக வழங்க உள்ளதாக தகவல் அனுப்பி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்