முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை, அக். 14 - மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவாக மதுரை புறநகர் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவரும், 18 வது வார்டு செயலாளருமான அமாவாசை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அ.தி.மு.க. சார்பில் வி.வி. ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் தத்ததம் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி பொதுமக்களிடம் கோரி வருகின்றனர். மேலும் வேட்பாளர் ராஜன் செல்லப்பா வாக்கு கேட்டு செல்லுமிடம் எல்லாம் அவருக்கு ஏராளமான பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்து இரட்டை இலைக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் 97 வது வார்டு நெல்லையப்புரத்தில் வாக்கு சேகரிக்க சென்ற ராஜன் செல்லப்பாவுக்கு ஆதரவாக மதுரை புறநகர் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவரும், 18 வது வார்டு செயலாளருமான அமாவாசை உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியின் போது புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவேல், கவுன்சிலர் வேட்பாளர் நாகலெட்சுமி, பன்னீர் செல்வம், நிலையூர் முருகன், திருநகர் நகர செயலாளர் பாலமுருகன், ஹார்விபட்டி செயலாளர் முருகேசன், மனோகரன், வீரமலை செட்டியார், குழந்தைவேல், ராமையா, கதிரேசன், பாண்டி, வக்கீல் பழனிராஜன், இளைஞர் பாசறை செயலாளர் கார்த்திக், பண்ணை ராஜேந்திரன், குமார், சலவை அம்மாசி, கருப்பையா, அழகுசுந்தரம், அம்மா பேரவை தலைவர் ராஜா, மணி, கண்ணம்மாள், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் சாரதா, கிருத்திகா, மகளிரணி தலைவி ஜெயலெட்சுமி, மகளிரணி செயலாளர் பாண்டியம்மாள், மணியம்மாள், சரோஜா, நிர்மலா, ராஜம்மாள், பஞ்சவர்ணம், அழகம்மாள், வெள்ளையம்மாள், மகேஸ்வரி, அன்னலெட்சுமி, முத்துமாரி, மலர்கொடி, பாப்பாத்தி, குருவம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago