முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க. பிரதிநிதிகளை தூக்கி எறியுங்கள் ஜெயலலிதா

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பூர்,அக்.- 15 - 100 சதவீத வெற்றியைக் கொடுத்து உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும்  திருப்புமுனை ஏற்படுத்தவேண்டும் என்று திருப்பூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.  நேற்று திருப்பூரில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா திருப்பூர் அ.தி.மு.க மேயர் வேட்பாளர் விசாலாட்சிமற்றும் திருப்பூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது. அப்போது அவர் பேசியதாவது. ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலின் போது உங்களை எல்லாம் சந்தித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டேன். எனது அன்பான வேண்டுகோளை ஏற்று குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்தீர்கள். இதனையடுத்து தமிழகத்தில் மக்களாட்சி மலர்ந்தது. புரட்சி தலைவர் எம்ஜிஆரின் ஆட்சி மலர்ந்தது. உங்களது அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டேன். இதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.     ஆட்சி பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை உங்கள் அன்பு சகோதரியான நான் நிறைவேற்றி இருக்கிறேன். அனைவருக்கும் விலையில்லா அரிசி, முதியோர், விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினேன். மகளிர் நலன் காக்கும் வகையில் திருமண உதவி திட்டங்களின் கீழ் ரூபாய் 25 ஆயிரம் உதவி  தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், பட்டம் படித்த பெண்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் என உயர்த்தப்பட்ட உதவி தொகையுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கினோம். மீனவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினோம். பெண் அரசு ஊழியர்கள் பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க 6 மாத காலம் மகப்பேறு வி

டுப்பு வழங்கினோம். இந்த திட்டங்களின் பயனை நீங்களெல்லாம் அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள். இது மட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை என்று ஒரு தனித்துறையினையும் ஏற்படுத்தி இருக்கிறேன். இவைமட்டுமின்றி தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கல்லூரி மாணவர்களுக்கு மடி கணினி, ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடுகள் படிப்பை பாதியிலே நிறுத்துதலை குறைக்கும் பொருட்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் திட்டங்களை எல்லாம் துவக்கி வைத்துள்ளேன்.

    சமூக நீதியை காக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து கடைபிடிக்க ஆணையிட்டுள்ளேன். இலங்கை இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டுமென்றும் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டப்பேரவையில் தீர்மானங்களை இயற்றி உள்ளோம். சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய காவல் துறை தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அமலி காடாக விளங்கிய தமிழகம் எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக நான்கே மாதங்களில் அமைதி பூங்காவாக மாறி இருக்கிறது.

   முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் நில அபகரிப்புகள் அதிக அளவில் நடைபெற்றன. இதனை அறிந்த நான் திமுக ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களுக்கு திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தேன். இதனை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிமிருந்து புகார்கள் பெற்று வழக்கு பதிவு செய்து சொத்துக்களை உரியவர்களிடம் வழங்கிட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக 25 சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கபடுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

சாயப்பட்டறை பிரச்சனை காரணமாக ஜவுளித் தொழில் முடங்கிப் போயுள்ளது. பலர் வேலையிழந்துள்ளனர். ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு பிரச்சனையால் இதற்கு தீர்வு காண குழு அமைத்து பிரதிநிதிகளுடன் பேசினோம். திருப்பூர் சுத்திகரிப்பு கழிவுநீரை ஜீரோசதவீதத்திற்கு கொண்டுவர ரூ.200 கோடி தேவை என்றார்கள். அந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.200 கோடி வழங்க ஒப்புதல் அளித்தேன். திருப்பூர் மாநகராட்சி கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க வசம் இருந்தது. எந்த அடிப்படை வசதிகளையும் செய்துதரவில்லை. தி.மு.க கவுன்சிலர்கள் என்றாலே ஒரு அச்ச உணர்வு. தி.மு.க.வினர்கள் வெறுக்கத்தக்க வகையில் நடந்து, மிரட்டி சொத்துக்களை அபகரித்துள்ளனர். நீங்கள் வளர்ச்சி அடைந்தீர்களோ இல்லையோ, தி.மு.க.வினர் வளர்ச்சி அடைந்தனர். 

திருப்பூர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நான்காவது குடிநீர்த் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், தரமான சாலைகள், பறக்கும் மேம்பாலம், புறநகர் பகுதியில் புதிய பேருந்துநிலையம், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றித் தருவோம். அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் நேர்மையாகவும், தூய்மையான ி, திறமையான நியாயமாகவும் செயல்படுவார்கள். தி.மு.கவை கடந்த தேர்தலைப் போல் தூக்கியெறியும் நல்ல சந்தர்ப்பம். 100 சதவீத வெற்றியைக் கொடுத்த கொங்கு மண்டலம் உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரக் கூட்டத்தில் சிறுகுறு தொழில்துறை அமைச்சர் சண்முகவேல், திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏக்கள் அவினாசி கருப்பசாமி, பரமசிவம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்