முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக ஆளுனர் ரோசய்யா இன்று மதுரை வருகை

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.- 15 - தமிழக ஆளுனர் ரோசய்யா இன்று மதுரை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் திருமலை நாயக்கர் மகாலுக்கு சென்று பார்வையிடுகிறார். 12 மணிக்கு காந்தி மியூசியம் வருகிறார். இதன் பிறகு சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார். மாலை 6.30 மணிக்கு ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறும் கரூர் வைஸ்யா வங்கி விழாவில் கலந்து கொள்கிறார். மறு நாள்காலை 10.15 மணிக்கு விமானத்தில் சென்னைக்கு புறப்படுகிறார்.

கவர்னர் வருகை குறித்து மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்