முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.இ. இந்தியா தொண்டர்களை கவுரவித்த அப்துல்கலாம்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை, அக்.- 15 - பள்ளிகளை தத்தெடுக்கும் பணிகளில் சிறந்து செயல்பட்ட ஜி.இ.இந்தியா தொண்டர்களை முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கவுரவித்துள்ளார். 

லீட் இந்தியா 2020 ஆண்டு என்பது இளைய தலைமுறையினரிடையே உள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் நிகழ்வு ஆகும். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 13 பள்ளிகள், ஒரு கிராமம் மற்றும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கோவையில் சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஜி.இ. தொண்டர்களின் இந்த பணியினை பாராட்டி கவுரவித்துள்ளார். இதுபற்றி ஜி.இ. நிறுவன தலைவர் சஞ்சீவ் ஜெயின் கூறுகையில், லீட் இந்தியா திட்டத்தின் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கென்று மிகச்சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி வருகிறோம். அனைவரும் தரமான மற்றும் உயர்தர வாழ்கை முறையை பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும், என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago