முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 7 இடங்களில் முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 15 - சென்னையில் இன்று முதல்வர் ஜெயலலிதா தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மாநகராட்சி மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி, மாநகராட்சி மன்ற வேட்பாளர்களை ஆதரித்து 7 இடங்களில் ஜெயலலிதா பேசுகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு: வேலூரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை வரும் முதல்வர் ஜெயலலிதா மதியம் 1.30 மணி அளவில் ஆலந்தூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே பேசுகிறார். வள்ளுவர் கோட்டம் அருகே தனது பிரச்சாரத்தை முடிக்கிறார். சென்னை மாநகராட்சி தேர்தல் 17-ந் தேதி நடைபெறுகிறது. எனவே இன்று (15-ந் தேதி) தேர்தல் பிரச்சார கடைசி நாள் ஆகும். முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம் வருமாறு:- 1. ஆலந்தூர் எம்.ஜி.ஆர். சிலை எதிரில் (ஜோதி தியேட்டர்)- பேசும் இடம்- கிண்டி மேம்பாலம் காசி தியேட்டர். 2. உதயம் தியேட்டர் எதிரில் பேசும் இடம்- 100 அடி சாலை, 3. அரும்பாக்கம் விநாயகபுரம் சந்திப்பு ஜவகர்லால் நேரு சாலைபேசும் இடம்- திருமங்கலம், பாடி மேம்பாலம், 4. கொரட்டூர் சந்திப்பு பேசும் இடம்- பாடி மேம்பாலம் திரும்புதல், எம்.டி.எச். ரோடு, பரசுராமர் ஈஸ்வரன் கோயில் தெரு, பட்டாச்சாரி தெரு, 5. என்.எம்.கே. தெரு மார்க்கெட் ஜங்ஷன் பேசும் இடம்- வி.பி.காலனி வழியாக மேடவாக்கம் டேங்க் ரோடு, கொன்னூர் நெடுஞ்சாலை, பிரிக்லின் ரோடு, சண்முகராயன் ரோடு சந்திப்பு, 6. மேகலா தியேட்டர் பேசும் இடம்- புரசைவாக்கம் நெடுஞ்சாலை, வெள்ளாளர் தெரு, அழகம்மை ரோடு, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, மெக்னிக்கல் ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, டேங்க் ரோடு, 7. புஷ்பா நகர் பேசும் இடம்- வள்ளுவர் கோட்டம், பாம்குரோவ் ஓட்டல், ராதாகிருஷ்ணன் சாலை, போயஸ் கார்டன். மேற்கண்ட 7 இடங்களில் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்.         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்