முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் பிரச்சனை தீர அ.தி.மு.க.,வை ஆதரியுங்கள் கோத்தகிரியில்-புத்தி சந்திரன் பேச்சு

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

ஊட்டி, அக்.- 15 - மக்கள் பிரச்சனை தீர அ.தி.மு.க.,வை ஆதரிக்க வேண்டுமென கோத்தகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் பேசினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் வாப்பு மற்றும் 20 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர்களை ஆதரித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:​ தமிழகத்தில் குடும்ப ஆட்சியை விரட்டி நல்லாட்சி வேண்டுமென்பதற்காக மக்கள் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,வை பெரும்பான்மையாக வெற்றி பெறச்செய்தார்கள். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிப்பொருப்பேற்ற நாளே மாதங்களில் வழங்கியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதேபோல் உள்ளாட்சிகளிலும் மக்கள் பிரச்சனைகள் தீர அ.தி.மு.க.,வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புறக்கிராமங்களில் ஏராளமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் தனது மக்களுக்காகவே சேர்த்துள்ளனர். எனவே நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வை தேர்ந்தெடுத்தால் கோத்தகிரியை சிறந்த நகரமாக மாற்றிக்காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் பொறுப்பாளர் பாரதியார், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பச்சநஞ்சன், கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டீபன், இளைஞரணி அமைப்பாளர் ராஜேந்திரன், செல்வம், சுப்பு, பேரூராட்சி தலைவர் வேட்பாளர் வாப்பு, கவுன்சிலர் வேட்பாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்