முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளர் உமாவை ஆதரித்து முத்துராமலிங்கம் வாக்கு சேகரிப்பு

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், அக்.- 15 - திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் உமாவை ஆதரித்து மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வீதிவீதியாக சென்று தீவிரவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் வி.உமா போட்டியிடுகிறார். இதேபோல் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்பேரில் வேட்பாளர்களை ஆதரித்து மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., திருமங்கலம் நகரின் 27 வார்டுகளிலும் வீதிவீதியாகச் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது சந்தைப்பேட்டை பகுதியில் அதிகளவு திரண்டிருந்த பொதுமக்களின் மத்தியில்  முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசியதாவது, தமிழக மக்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் வாரி வழங்கிவருகிறார். அந்த நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை நேரடியாக சென்று முழுமையாக கிடைத்திட நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்திடுங்கள். திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம், தரமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைத்திட, காவிரி கூட்டுக்குடிநீர்  திட்டம், பஸ்நிலைய விரிவாக்கம், திருமங்கலத்தில் அரசு கலைக்கல்லூரி, குண்டும், குழியுமான சாலைகள் சீரமைப்பு, விமான நிலைய சாலை ரயில்வே மேம்பாலம், மாம்பட்டி கிராமத்திற்கு செல்ல குண்டாற்றின் மேம்பாலம் என பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மாநகரங்களுக்கு இணையாக தரம் உயர்த்திட திருமங்கலம் நகரில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றிப் பெற செய்திடுவது வாக்களர்களின் கடமையாகும். எனவே உள்ளாட்சியில் நல்லாட்சி கிடைத்திட, மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்திட திருமங்கலம் நகர்மன்ற தலைவர்வர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வி.உமா மற்றும் 27 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்திடுங்கள் என்று பேசினார்.
அப்போது மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், நகரச்செயலாளர் ஜே.டி.விஜயன், முன்னாள் நகர்மன்ற தலைவர் நிரஞ்சன், அவைத்தலைவர் ஜஹாங்கீர் மற்றும் நகர, வார்டு அ.தி.மு.க. நிர்வாகிகள், ச.ம.க. நிர்வாகிகள் என ஏராளமானோர் பிரச்சாரத்தின் போது உடன் சென்றனர். பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் ஏராளமான மக்கள் திரண்டுவந்து ஆரத்தி எடுத்தும், பட்டாசுகளை வெடித்தும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

புட்நோட்:
திருமங்கலம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.உமாவை ஆதரித்து மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பிச்சாரம் செய்தார். உடன் நகரச்செயலாளர் விஜயன், முன்னாள் நகர்மன்ற தலைவர் நிரஞ்சன் ஆகியோர் உள்ளனர்.
--------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்