முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் கமிஷன் 2வது நாள்ஆலோசனை

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, அக்.- 15 - உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த மாநில தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து நேற்று 2வது நாள் ஆலோசனை நடத்தியது.
மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுரைகள் வழங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தலை அமைதியாகவும், நடுநிலையுடனும் நடத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும். பதட்டமானபகுதிகளில் பாதுகாப்புக்கு எந்தவித ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. சென்னையில் நேற்று 2-வது முறையாக உள்ளாட்சி தேர்தல் பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு,  மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் தலைமை தாங்கினார். ஆலோசனை கூட்டத்தில் மாநில தேர்தல் செயலாளர் சேவியர் கிறிஸ்சோ நாயகம், போலீஸ் டி.ஜி.பி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், கூடுதல் டி.ஜிபி. (அமலாக்கம்) காந்திராஜன், தேர்தல் ஐ.ஜி அலெக்சாண்டர் மோகன், வடக்கு மண்மடல போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு, தேர்தல் சூப்பிரண்டு மோகன், கூடுதல் துணை கமிஷனர் விமலா ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னையில் வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் பதட்டமான இடங்கள் எவை? அங்கு பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்துவது  என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுபோல தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்பது பற்றியும் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்